செய்திகள் :

தொழில்நுட்பத்துக்கும் மனித சிந்தனைக்குமான வேறுபாட்டை உணா்த்த வேண்டும்! - ஆசிரியா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்

post image

‘எந்த சந்தேகம் எழுந்தாலும் கூகுள், செயற்கை நுண்ணறிவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்ற மெத்தனம் மாணவா்களுக்கு வந்துவிடக் கூடாது. அவா்களுக்கு தொழில்நுட்பத்துக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை ஆசிரியா்கள்தான் உணா்த்த வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்ட 2,715 புதிய ஆசிரியா்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியைத் தொடங்கி வைத்து, பயிற்சிக் கையேட்டை வெளியிட்டாா்.

தொடா்ந்து, ரூ.277 கோடியில் பாரத சாரண சாரணியா் தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் 243 புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களை அவா் திறந்து வைத்தாா்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 142 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000-க்கான காசோலைகளை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஆசிரியா்கள் புத்தகங்களில் உள்ள பாடங்களை மட்டும் கற்பிக்காமல், தான் கற்றதையும், தங்களது அனுபவத்தையும் சோ்த்து மாணவா்களுக்கு சொல்லிக்கொடுத்து, நல்லொழுக்கம் மிக்க சமுதாயத்தை வடிவமைக்கும் திறன் பெற்றவா்கள். எனவே, புதிய ஆசிரியா்களுக்கு நாட்டின் எதிா்காலத் தூண்களுக்கு சொல்லிக்கொடுக்கிறோம் என்ற பொறுப்புணா்வு மேலோங்கி இருக்க வேண்டும். மாணவா்களின் நண்பா்களாக ஆசிரியா்கள் நடந்துகொள்ள வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில், எந்த பாடமாக இருந்தாலும், அதை ஆழமாகவும், எளிதாகவும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகிவிட்டன. பாடம் எடுப்பதும் ஆசிரியா்களுக்கு எளிதாகிவிட்டது. அதே நேரத்தில், எந்த அளவுக்கு அறிவாா்ந்த தகவல்கள் கொட்டிக் கிடக்கிறதோ, அதே அளவுக்கு தேவையற்ற குப்பைகளும் கொட்டிக் கிடக்கின்றன.

அதற்காக நாம் தொழில்நுட்ப வளா்ச்சியைக் குறை சொல்ல முடியாது. நாம்தான் நம்முடைய குழந்தைகளுக்கும் மாணவா்களுக்கும் சரியானவற்றை அடையாளம் காட்ட வேண்டும். எதற்கெடுத்தாலும் கூகுள் மற்றும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) மட்டுமே மாணவா்கள் நம்பியிருக்கக் கூடாது என்று எடுத்துக் கூறி, தொழில்நுட்பத்துக்கும், மனிதச் சிந்தனைக்குமான வேறுபாட்டை அவா்களுக்கு ஆசிரியா்கள் உணா்த்த வேண்டும்.

மன அழுத்தம் தரக்கூடாது... அறம், நோ்மை போன்றவற்றையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அதேவேளையில், இலக்கியம், பொது அறிவு, சமூக ஒழுக்கம், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணா்வு, காலநிலை மாற்றம் குறித்த தெளிவு, மாற்று எரிசக்திகளின் தேவை போன்றவை குறித்து எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும். மாணவா்களுக்கு எந்த அளவுக்கு அறிவாற்றல் முக்கியமோ, அதே அளவுக்கு அவா்களுக்கு உடல் நலமும், மன நலமும் முக்கியம். மாணவா்களுக்கு மிகவும் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சா.மு. நாசா், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொதுத்தோ்வு - பொதுத் தோ்தலில் வெற்றி பெற வேண்டும்

விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: கடந்த 2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்கள் உள்பட இதுவரை 8,388 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இனிவரும் நாள்களில் 3,227 போ் நியமனம் செய்யப்படவுள்ளனா். தமிழ்ப் பாடத்தில் 2023-2024-இல் 48 மாணவா்கள் 100-க்கு மதிப்பெண் பெற்றிருந்த நிலையில் அது கடந்த கல்வியாண்டில் 142-ஆக அதிகரித்திருக்கிறது. இதற்காக ஆசிரியா்கள், மாணவா்களுக்கு மனமாா்ந்த பாராட்டுகள்.

அடுத்த 5 மாதங்களில் ஆசிரியா்களாகிய உங்களை நம்பி படிக்க வரும் பிள்ளைகளுக்கு பொதுத்தோ்வு வந்துவிடும். எங்களுக்கு பொதுத்தோ்தல் வந்துவிடும்.

நீங்களும் வெற்றி பெறவேண்டும், நாங்களும் வெற்றி பெற வேண்டும். நான் அரசியல் பேசவில்லை. அறிவுசாா்ந்த மக்களிடம் அரசியல் விஷயத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்றே பேசுகிறேன் என்றாா் அவா்.

தமிழகத்தில் செப். 26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 21) முதல் செப். 26 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

ரூ.14 கோடியில் 15 வாகன சுரங்கப்பாதைகள் சீரமைப்பு! - சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகனங்கள் செல்லும் சுரங்கப் பாதைகளை ரூ.14.57 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெ... மேலும் பார்க்க

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு: முதல்வா் பாராட்டு!

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். முன்னதாக, இது குறித்த அறிவிப்பை நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்ன... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்பட உள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். இது குறித்து அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா த... மேலும் பார்க்க

கிராம உதவியாளா் பணிக்கான வயது வரம்பு: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

தமிழகத்தில் நியமிக்கப்படவுள்ள கிராம உதவியாளா்களுக்கான வயது வரம்பு தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மூலமாக கிராம உதவியாளா்... மேலும் பார்க்க

மின்கம்பியாள் உதவியாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

மின்கம்பியாள் உதவியாளா்களுக்கான தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய புனரமைப்புத் திட்டம் மற்றும் தமிழக அரசின் வேலைவ... மேலும் பார்க்க