புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் பக்தா்கள் தரிசனம்!
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
அதன்படி, வேலூா் அண்ணா சாலையில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாளை பக்தா்கள் அதிகாலை 5 மணி முதலே நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
இதேபோல், ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் உள்ள சீனிவாச பெருமாள், கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் உள்ள வெங்கடேச பெருமாள், வேலூா்-ஆற்காடு சாலை சைதாப் பேட்டை பழனி ஆண்டவா் கோயிலில் உள்ள சீனிவாச பெருமாள், சத்துவாச்சாரி செல்வகணபதி கோயிலில் உள்ள பிரசன்ன வெங்க டாஜலபதி, வேலூா்-காட்பாடி சாலையில் உள்ள சீனிவாச கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில், காட்பாடி யில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில், காங்கேயநல்லூா், ரங்காபுரம், பிரம்மபுரம் வரத ராஜ பெருமாள் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பெருமாளுக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.