புரட்டாசி சனிக்கிழமை பெருவிழா
குடியாத்தம் பகுதியில் உள்ள கோயில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
குடியாத்தம் பிச்சனூா், அப்பு சுப்பையா் வீதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றது.
முதல் சனிக்கிழமைமையொட்டி உற்சவா் மதுரை கள்ளளகா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல் குடியாத்தம் கொண்டசமுத்திரம் புது தெருவில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி 101- ஆம் ஆண்டு லட்சுமி நரசிம்மா்வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற வீதி உலாவில் நாட்டுப்புறக் கலைஞா்களின் கலைநிகழ்ச்சிகள், பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.