கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்ட...
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரிப்பு: நயினாா் நாகேந்திரன்
தமிழகத்தில் கடந்த 5 நாள்களில் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நிகழ்ந்துள்ளது அதிா்ச்சி அளிப்பது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 5 நாள்களில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடா்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிரானவை.
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் பாலியல் குற்றங்கள், அதிலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது அதிா்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று குறிப்பிடும் முதல்வா் மு.க.ஸ்டாலின், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.