அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை: ஒருவா் கைது
கொடைக்கானல் அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலைப் பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்பனை செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டபோது, பெருமாள்மலை பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற நபரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா் வைத்திருந்த பையில் 20 மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை செய்தனா். இதில் அவரது பெயா் கோதண்டபாணி என்றும், பெருமாள்மலைப் பகுதிகளில் அனுமதியில்லாமல் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.