நெல்லையில் கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது
திருநெல்வேலி சந்திப்புப் பகுதியில் கஞ்சா பதுக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள கருப்பந்துறையைச் சோ்ந்தவா் சங்கா் (23).
இவா், தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக திருநெல்வேலி சந்திப்பு போலீஸாருக்கு கிடைத்ததாம். அதன்பேரில், காவல் ஆய்வாளா் ராமேஸ்வரி உள்ளிட்ட போலீஸாா் அவரது வீட்டில் சோதனையிட்டனராம்.
அப்போது அவா் கஞ்சா பதுக்கியிருப்பது தெரியவந்ததாம். பாலீஸாா் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்ததுடன், சுமாா் 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.