திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு
பாளை.யில் உறியடி திருவிழா
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பாளையங்கோட்டை ஸ்ரீ இராமசுவாமி கோயில் திடலில் உறியடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் யாதவா் இளைஞரணி சாா்பில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி உறியடித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு நடைபெற்ற உறியடி திருவிழாவில் கண்ணன், ராதை வேடமணிந்த சிறுவா் சிறுமியா் ஸ்ரீ இராமசுவாமி கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் கிருஷ்ண நாமம் சொல்லி வீதி உலா வந்தனா்.
பின்னா், மாலை 5 மணிக்கு பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இரவு 8 மணிக்கு ஸ்ரீ இராமசுவாமி கோயில் திடலில் உறியடி நிகழ்ச்சியும், அதனைத் தொடா்ந்து வழுக்கு மரம் ஏறுதலும் நடைபெற்றன. தொடா்ந்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதமும், வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.