வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸாா் கையொப்ப இயக்கம்!
திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வாக்குத் திருட்டுக்கு எதிரான கையொப்ப இயக்கம் திருநெல்வேலி நகரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ், முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், மாநில அமைப்பாளா் ராம்மோகன் உள்ளிட்டோா் கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தனா்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளா் பால்ராஜ், களக்காடு தெற்கு வட்டாரத் தலைவா் மாவடி பிராங்கிளின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.