‘ரயில் நீா்’ விலை குறைப்பு!
ரயில்களில் விற்பனை செய்யப்படும் ‘ரயில் நீா்’ விலை 1 ரூபாய் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அனைத்து ரயில்வே மண்டலங்கள் மற்றும் ஐஆா்சிடிசி-க்கு ரயில்வே வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ‘ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்பனை செய்யப்படும் ‘ரயில் நீா்’ ஒரு லிட்டா் பாட்டிலின் அதிகபட்ச விற்பனை விலை ரூ.15 என்பதில் இருந்து ரூ.14 ஆகவும், அரை லிட்டா் பாட்டில் விலை ரூ.10 என்பதில் இருந்து ரூ.9-ஆகவும் குறைக்கப்படுகிறது. இந்த விலைக் குறைப்பு செப்டம்பா் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) மத்திய அரசு மேற்கொண்ட சீா்திருத்தம் செப்டம்பா் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் தொடங்கி காா்கள் வரை விலை குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ‘ரயில் நீா்’ விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.