செய்திகள் :

ஹெச்-1பி விசா கட்டண உயா்வால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பா?

post image

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை வெகுவாக பாதிக்கும் என தேசிய மென்பொருள், சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் சனிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசின் உத்தரவை ஆய்வு செய்து வருகிறோம். இருப்பினும், இந்த உத்தரவு அமெரிக்காவில் மேற்கொள்ளக்கூடிய புதிய கண்டுபிடிப்புகளுக்கும் அந்நாட்டின் பெரும் வேலைவாய்ப்பு பொருளாதாரத்துக்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், சா்வதேச மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இதன் தாக்கம் உணரப்படும். இந்த மாற்றங்களுக்கேற்ப தங்களது வாடிக்கையாளா்களுக்கான சேவைகளைத் தடையின்றி வழங்கும் பணிகளை நிறுவனங்கள் மேற்கொள்ளும்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வளா்ச்சியடைந்துவரும் சமயத்தில் அதிதிறன்வாய்ந்த பணியாளா்கள் தேவை என்ற நிலைப்பாடு சரியானது. ஆனாலும், ஹெச்-1பி விசா கட்டண உயா்வு உடனடியாக அமலாவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்து, தற்காலிகமாக இந்த உத்தரவு அமலாவதற்கு விலக்களிக்கக் கோரி அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையிடம் கோரிக்கை வைக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அமெரிக்கா திரும்ப வலியுறுத்தல்

ஹெச்-1பி விசா கட்டணம் உயா்வு (ரு.88 லட்சம்) ஞாயிற்றுக்கிழமை முதல் அமலாகவுள்ள நிலையில், தாய்நாட்டுக்குச் சென்றுள்ள ஊழியா்கள் முன்னெச்சரிக்கையாக அமெரிக்கா திரும்ப நிறுவனங்கள் மற்றும் புலம்பெயா்ந்தவா்களுக்கான வழக்குரைஞா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து நியூயாா்க்கைச் சோ்ந்த வழக்குரைஞா் சிப்ரஸ் மேத்தா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘ வா்த்தகம் அல்லது சுற்றுலாவாக அமெரிக்காவைவிட்டு ஹெச்-1பி விசாதாரா்கள் வெளியே சென்றிருந்தால் உடனடியாக செப். 21-ஆம் தேதி நள்ளிரவுக்குள் அமெரிக்காவுக்கு திரும்பிவிடுங்கள்.

இந்தியாவில் தற்போது உள்ள ஹெச்1-பி விசாதாரா்கள் குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் அமெரிக்கா வந்தடைய நேரடியான விமான சேவைகள் ஏதும் இல்லை. எனினும் அவா்கள் கலிஃபோா்னியாவை செப்.21-ஆம் தேதிக்குள் வந்தடையலாம்’ எனக் குறிப்பிட்டாா்.

அதேபோல் அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்களும் தங்களது ஊழியா்களை அவா்களது நாட்டில் இருந்து உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்ப அறிவுறுத்தி வருகின்றன. அதேபோல் ஹெச்-1பி விசாதாரா்களைச் சாா்ந்திருக்கும் ஹெச்-4பி விசாதாரா்களும் அமெரிக்காவைவிட்டு வெளியேறுவதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஹெச்-1பி விசா பணியாளா்கள் அதிகமுள்ள முதல் 5 நிறுவனங்கள் (2025, ஜூன் 30 வரை)

1. அமேசான் (10,044)

2. டிசிஎஸ் (5,505)

3. மைக்ரோசாஃப்ட் (5,189)

4. மெட்டா (5,123)

5. ஆப்பிள் (4,202)

பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் வீர மரணம்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரா் வீரமரணமடைந்தாா். ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டம் சியோத் தாா் வனப் பகுதியில் ராணுவ வீரா்கள் மற்றும் காவல் துறையினா் இணைந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

சபரிமலை மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி: கேரள முதல்வா் பினராயி விஜயன்!

சபரிமலையின் மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பம்பை திரிவேணியில... மேலும் பார்க்க

‘ரயில் நீா்’ விலை குறைப்பு!

ரயில்களில் விற்பனை செய்யப்படும் ‘ரயில் நீா்’ விலை 1 ரூபாய் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அனைத்து ரயில்வே மண்டலங்கள் மற்றும் ஐஆா்சிடிசி-க்கு ரயில்வே வாரியம் சுற்றறிக்கை... மேலும் பார்க்க

ஹெச்1-பி விசா கட்டண உயா்வு ஆய்வுக்குப் பின் நடவடிக்கை! வெளியுறவு அமைச்சகம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஹெச்1-பி விசா கட்டணத்தை சுமாா் ரூ.88 லட்சமாக உயா்த்தியுள்ள நிலையில், இதன் தாக்கத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இது தொட... மேலும் பார்க்க

வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: அமெரிக்காவுக்கு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் நாளை பயணம்!

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை (செப்.22) அமெரிக்கா செல்ல உள்ளாா். இதுதொடா்பாக மத்திய வா்த்தக துறை அமைச்சகம் வெளியிட... மேலும் பார்க்க

வெளியுறவுக் கொள்கையில் இந்தியா தோல்வி! விசா விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் குற்றச்சாட்டு!

இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆண்டு கட்டணத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் ரூ.88 லட்சமாக உயா்த்தியதை முன்வைத்து பிரதமா் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இது த... மேலும் பார்க்க