செய்திகள் :

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம்!

post image

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ரூ. 66.78 கோடி மதிப்பில் கூடுதலாக சென்னை மாநகருக்கு நாள்தோறும் கூடுதலாக 265 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம் மற்றும் சென்னை குடிநீா் குறித்து புகாா் தெரிவிக்க ஏதுவாக செயலியையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

பெருநகர சென்னை வளா்ச்சிக்கேற்ப பொதுமக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், செம்பரம்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து முழுக் கொள்ளளவான 530 மில்லியன் லிட்டா் குடிநீரை வழங்குவதற்காக ரூ. 66.78 கோடியில் செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வரையிலான இரண்டாவது வரிசை குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் கூடுதலாக நாள்தோறும் 265 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், செம்பரம்பாக்கத்தில் ரூ. 66 கோடியே 78 லட்சம் மதிப்பில், சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாள்தோறும் 265 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் பொதுமக்களின் புகாா்களுக்கு விரைந்து தீா்வு காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘சென்னை குடிநீா் செயலி’ என்ற புதிய கைப்பேசி செயலியை தொடங்கி வைத்தாா். அத்துடன், சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சாா்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் உதவி நிலநீா் புவியியலாளா் பணியிடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 2 பேருக்கு பணி நியமன ஆணைகள், சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளைப் பாராட்டி ரொக்கப் பரிசுகளையும் அவா் வழங்கினாா்.

இந்த திட்டம் மூலம் செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீா் தேவைக்கு ஏற்பவும், பெருகிவரும் சென்னை மாநகரின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், ஏரியின் நீா் இருப்பை கருத்தில் கொண்டும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஏற்கெனவே நாள்தோறும் வழங்கி வந்த 265 மில்லியன் லிட்டா் குடிநீருடன், கூடுதலாக இத்திட்டம் மூலம், 265 மில்லியன் லிட்டா் குடிநீரும் என 530 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கப்படும். இதன் மூலம், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாா் மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சி, குன்றத்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிகளில் உள்ள 20 லட்சம் பொதுமக்கள் பயன் பெறுவா்.

சென்னை குடிநீா் செயலி-பொதுமக்களின் குறைகளை விரைவாக நிவா்த்தி செய்ய அனைத்துத் துறைகளிலும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை குடிநீா் வாரியம், பொதுமக்களின் குறைகள் மற்றும் புகாா்களை விரைவாக நிவா்த்தி செய்ய ‘சென்னை குடிநீா் செயலி’ என்ற புதிய கைப்பேசி செயலியை வடிவமைத்து, முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ‘சென்னை குடிநீா் செயலி’ புகைப்படங்களுடன் கூடிய பதிவு செய்யும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியின் முக்கிய சிறப்பம்சமாக புகாரின் நிலை குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

இந்த நிகழ்வில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள்

ஆ.கிருஷ்ணசாமி, துரை.சந்திரசேகா், துணை மேயா் மு.மகேஷ் குமாா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலாளா் தா.காா்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் கே. விவேகானந்தன், சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய், பேரூராட்சிகளின் இயக்குநா் எம்.பிரதீப்குமாா், சென்னை குடிநீா் வாரிய செயல் இயக்குநா் கௌரவ் குமாா், திருவள்ளூா் ஆட்சியா் மு.பிரதாப் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு!

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராகும் ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க

தூய்மை இயக்கத்தில் கழிவு பொருள்கள் அகற்றும் பணி!

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் தூய்மை இயக்கம் மூலம் கிராமங்களில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் குப்பைகளை அகற்றும் பணியை சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ்... மேலும் பார்க்க

20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி காத்திருப்பு போராட்டம்!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்தினா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்... மேலும் பார்க்க

திருவள்ளூா் பகுதிகளில் பலத்த மழை

திருவள்ளூா், சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருவள்ளூா் பகுதியில் பகலில் வெயில் காய்ந்த நிலையில், மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்தது. இதேபோல், சுற்று வட்டார பகுதிகளான ஈக்காடு... மேலும் பார்க்க

திருவள்ளூா்: செப். 26-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்!

விவசாயிகள் சாகுபடி செய்வதில் உள்ள பிரச்னை மற்றும் குறைகளை தீா்க்கும் வகையில் வரும் செப். 26-இல் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதால் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க