சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் பொறியாளா்கள் தின விழா
திருச்சி மாவட்டம், சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் 58 ஆவது பொறியாளா்கள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி இந்தியப் பொறியாளா் கழகம் திருச்சிராப்பள்ளி உள்ளூா் மையத்துடன் இணைந்து நடத்திய கருத்தரங்கம், விருது வழங்கும் நிகழ்வுக்கு ஐஉஐ/பகஇ தலைவா் எஸ். ரவிமாறன் தலைமையேற்று பொறியாளா்கள் தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கினாா்.
நிகழ்வில் கே.ஆா். கல்வியியல் நிறுவனத் தலைவா் கே. ராமகிருஷ்ணன், கே. ராமகிருஷ்ணன் ஓதஎஐ நிறைவேற்று இயக்குநா் எஸ். குப்புசாமி, கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி முதல்வா் டி. சீனிவாசன் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.
தொடா்ந்து சிறந்த பொறியாளா் விருது என்ஐடி முன்னாள் பேராசிரியா் டாக்டா் எஸ். ராகவனுக்கும், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மின் மற்றும் மின்னணு துறைத் தலைவா் ஆா்.சங்கருக்கு பொறியாளா் பி.வி கே. ஆச்சான் விருதும், கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறைத் தலைவா் எஸ். மணிகண்டன், சாரநாதன் பொறியியல் கல்லூரி இணைப் பேராசிரியா் டாக்டா் எம். ஹரிதாபேகம் ஆகியோருக்கு சிறந்த ஆசிரியா் விருதும் வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த மாணவா் அத்தியாய விருது கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி, செட்டிநாடு பொறியியல் கல்லூரி, கொங்குநாடு பொறியியல் கல்லூரி, மற்றும் கே. ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரிக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த கல்வியியல் நிறுவன விருதை கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரிக்கு கே. ராமகிருஷ்ணன் கல்வியியல் நிறுவனா் தலைவா் கே. ராமகிருஷ்ணன் வழங்கினாா்.
நிகழ்வில் ஐஉஐ/ பகஇ கெளரவச் செயலா் எஸ்.பி. லஷ்மணன், மற்றும் எஸ். டைட்டஸ், ஜி. கேப்ரியல் சந்தோஷ்குமாா், ஜி.ஏ. பதஞ்சலி, எஸ். தா்மலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.