லாரியில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!
குடியாத்தம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 36- கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2- போ் கைது செய்யப்பட்டனா்.
பரதராமி போலீஸாா், காவல் ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆந்திர மாநில எல்லையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு சரக்கு ஏற்றிக் கொண்டு வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் லாரியில் 36- கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக லாரியை ஓட்டு வந்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த முத்துக்காளை (30), திருச்செந்தூரான்(47) இருவரையும் போலீஸாா் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.