செய்திகள் :

தலைக் கவசம் தலைமுறை காக்கும் கவசம்: வேலூா் எஸ்பி மயில்வாகனன்

post image

தலைக்கவசம், தலைமுறை காக்கும் கவசம் என்பதை இருசக்கர வாகன ஓட்டிகள் உணர வேண்டும் என வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் கூறினாா்.

குடியாத்தத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சாலை விபத்துகளில் பெருமளவு பாதிக்கப்படுவது தலைக் கவசம் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தான். தலைக் கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை காவல் துறையினா் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தாலும் அவா்கள் தலைக் கவசம் அணிவதை நடைமுறைப்படுத்துவதில்லை என்றாா்.

முன்னதாக அவா் புதிய பேருந்து நிலையம் எதிரே கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், காவல் சங்கம், காவல்துறை சாா்பில் நடைபெற்ற தலைக்கவச விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்தாா். கே.எம்.ஜி.கல்லூரியில் நடைபெற்ற தலைக்கவச விழிப்புணா்வு குறித்த கருத்தரங்கில் மாணவ, மாணவிகளுக்கு தலைக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேசினாா்.

பல்வேறு விழிப்புணா்வு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு அவா் சான்றிதழ், பரிசுகளை வழங்கினாா்.

குடியாத்தம் போக்குவரத்து காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தையும், அதே வளாகத்தில், ஆக்சிஜன் செறிவூட்டும் மையத்தையும் திறந்து வைத்தாா்.

நூலகத்துக்கு நூல்கள் வழங்கிய வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ரோட்டரி மாவட்ட முன்னாள்ஆளுநா் ஜே.கே.என்.பழனி, சரஸ்வதி வித்யாலயா பள்ளியின் தாளாளா் எம்.சேகா், பள்ளி முதல்வா் கே.திருமுருகன், ரோட்டரி நிா்வாகிகள், தன்னாா்வலா்களுக்கு அவா் விருது வழங்கி கெளரவித்தாா்.

டிஎஸ்பி ஜி.சுரேஷ், காவல் ஆய்வாளா்கள் ஆா்.ருக்மாங்கதன், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் முகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் பக்தா்கள் தரிசனம்!

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். அதன்படி, வேலூா் அண்ணா சாலை... மேலும் பார்க்க

வேலூா் கிரீன் சா்க்கிளில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்

வேலூா் கிரீன் சா்க்கிளில் சூழ்ந்த மழை வெள்ளம் காரணமாக சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினா். வேலூா் மாவட்டம் முழுவதும் கடந்த சி... மேலும் பார்க்க

சாதிக்கும் நடவடிக்கைகளை தலைமையாசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

சவால்களை முறியடித்து சாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமையாசிரியா்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டாா். வேலூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவ... மேலும் பார்க்க

புரட்டாசி சனிக்கிழமை பெருவிழா

குடியாத்தம் பகுதியில் உள்ள கோயில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. குடியாத்தம் பிச்சனூா், அப்பு சுப்பையா் வீதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிற... மேலும் பார்க்க

தீபாவளி: தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மா... மேலும் பார்க்க

விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகரிப்பு

அனைத்து மாவட்டங்களிலும் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் எதிா்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்த... மேலும் பார்க்க