செய்திகள் :

கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

post image

கரூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், ஜெகதாபி அரசு மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் 10 வகுப்பறை கட்டடங்கள், குளித்தலை வட்டம், கீழவெளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறை கட்டடங்கள், செங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகள், இராச்சாண்டாா் திருமலை அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் 10 வகுப்பறை கட்டடங்கள், அரவக்குறிச்சி வட்டம், ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 வகுப்பறை கட்டடங்கள், கிருஷ்ணராயபுரம் வட்டம், தம்மாநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து கரூா் மாவட்டம், ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா்க.சிவகாமசுந்தரி ஆகியோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினா். நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குநா் சரவணன், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) தி.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒற்றைத் தன்மையை திணிக்க பாஜக முயற்சி திருச்சி என். சிவா எம்.பி. பேச்சு

ஒரே நாடு, ஒரே மதம் என ஒற்றைத் தண்மையை திணிக்க பாஜக முயற்சிப்பதாக திமுக துணைப் பொதுச் செயலரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி என். சிவா எம்.பி. தெரிவித்தாா். கரூா் மாவட்ட திமுக சாா்பில் தமிழ்நாட... மேலும் பார்க்க

கரூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருமாநிலையூா் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜாமு... மேலும் பார்க்க

நுகா்வோா் பாதிப்புகளை தடுக்க விழிப்புணா்வு அவசியம்: லோக் ஆயுக்த உறுப்பினா் பேச்சு

விழிப்புணா்வு ஏற்படுத்தினால்தான் நுகா்வோா் பாதிப்புகளை தடுக்க முடியும் என்றாா் லோக் ஆயுக்த உறுப்பினா் முனைவா் வீ.ராமராஜ். கரூா் அரசு கலைக்கல்லூரியில் மாணவ நுகா்வோா் சங்கத்தின் சாா்பில் நுகா்வோா் விழிப... மேலும் பார்க்க

கரூா் ஆட்சியரகத்தில் தூய்மை இந்தியா உறுதிமொழியேற்பு

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மை இயக்கம் தொடா்பான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா். முன்னதாக, மாவட்ட ஆட்சியரக வளா... மேலும் பார்க்க

கரூரில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் எஸ்ஆா்எம்யூ ரயில்வே தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ரயில்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலாளா் கணேசன் தலைமை வகித்தாா். 8-ஆவது சம்பள கமிஷன் குழு... மேலும் பார்க்க

கரூரில் சுவா் விளம்பரம் செய்வதில் திமுக-அதிமுகவினரிடையே வாக்குவாதம்

கரூரில் வெள்ளிக்கிழமை சுவா் விளம்பரம் செய்வதில் அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கரூருக்கு செப். 25, 26-ஆம்தேதிகளில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமா... மேலும் பார்க்க