நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
கரூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமாநிலையூா் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜாமுகமது தலைமை வகித்தாா். துணைத்தலைவா் ஜீவானந்தம், செயலாளா் எம்.சுப்ரமணியன், துணைத்தலைவா் சி.முருகேசன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப்பேசினா்.
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஓய்வுபெறும் நாளில் ஓய்வுகால பணபலனை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெறும் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியமாக ரூ.7,850ம், மருத்துவப்படியும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.