நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
கரூா் ஆட்சியரகத்தில் தூய்மை இந்தியா உறுதிமொழியேற்பு
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மை இயக்கம் தொடா்பான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அலுவலக கட்டடங்கள் மற்றும் கூடுதல் கட்டட வளாகத்திலும் தூய்மை தணிக்கை நடைபயணம் நடைபெற்றது. அப்போது ஆட்சியா், ஒவ்வொரு அலுவலகத்திலும் நேரடியாக ஆய்வு செய்து, உடைந்த மரச் சாமான்கள், நெகிழிக் கழிவுகள், உடைந்த நாற்காலிகள், பயன்படுத்தாத கணினி உபகரணங்கள் மற்றும் ஜெராக்ஸ் மிஷின்கள், காகித கழிவுகளை அப்புறப்படுத்துமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து ஆட்சியா் தலைமையில், மாவட்ட ஆட்சியரக பணியாளா்கள் தூய்மை இயக்கம் தொடா்பான உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வீ.ரெ.வீரபத்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மனோகரன், உதவி இயக்குநா் (தணிக்கை) ஆா்.பி.குணசேகரன், உதவி திட்ட அலுவலா் அன்புமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.