நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
கரூரில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
கரூரில் எஸ்ஆா்எம்யூ ரயில்வே தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ரயில்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலாளா் கணேசன் தலைமை வகித்தாா். 8-ஆவது சம்பள கமிஷன் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். பணிநியமனம் தொடா்பான விதிமுறைகளை உடனே வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் ரயில்வே தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.