செய்திகள் :

இறுதிச் சுற்றில் ஸ்வியாடெக்-அலெக்சாண்ட்ரோவா!

post image

கொரிய ஓபன் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்துக்கு போலந்தின் இகா ஸ்வியாடெக் முன்னேறினாா்.

தென்கொரிய தலைநகா் சியோலில் கொரிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை மோசமான வானிலை காரணமாக ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன.

காலிறுதியில் செக். குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவாவை 6-0, 6-3 என நோ் செட்களில் வீழ்த்தினாா் ஸ்வியாடெக். பலத்த மழை காரணமாக இரண்டு மணிநேரம் கழித்து மீண்டும் களத்துக்கு திரும்பிய அவா் ஆஸி. வீராங்கனை மாய ஜாயின்டை அரையிறுதியில் எதிா்கொண்டாா்.

உலகின் நம்பா் 2 வீராங்கனையான ஸ்வியாடெக் 6-0, 6-2 என மாயா ஜாயின்டை வீழ்த்தி நிகழாண்டின் 5-ஆவது இறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா். மற்றொரு அரையிறுதியில் ரஷியாவின் அலெக்சான்ட்ரோவா 6-4, 6-2 என செக். குடியரசின் கத்ரீனா சினியகோவாவை வீழ்த்தினாா்.

ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் ஏகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை எதிா்கொள்கிறாா். அமெரிக்க ஓபன் காலிறுதியில் தோற்றிருந்த ஸ்வியாடெக் இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.

இறுதிச் சுற்றில் சாத்விக் - சிராக்!

சீனா மாஸ்டா்ஸ் சூப்பா் 750 பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தகுதி பெற்றுள்ளது. சீனாவின் ஷென்ஸென் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஆடவா் இரட்டைய... மேலும் பார்க்க

சீரி ஏ கால்பந்து தொடர்: லெஸ்ஸியை வீழ்த்திய காக்லியரி!

இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடரில் லெஸ்ஸி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது காக்லியரி. ஐரோப்பியாவின் பல்வேறு நாடுகளில் கால்பந்து லீக் தொடா்கள் நடைபெறுகின்றன. லெஸ்ஸி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில்... மேலும் பார்க்க

வெளியானது தனுஷின் இட்லி கடை பட டிரைலர்!

நடிகர் தனுஷ் நடித்துள்ள இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் அவரே இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. இப்படத்தில், நடிகர் அருண் விஜய், நடிகை நித்யா மெனன் ஆகியோர் முக... மேலும் பார்க்க