செய்திகள் :

ஐரோப்பிய விமான நிலையங்களில் இணையவழி தாக்குதல்!

post image

ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் உள்நுழைவு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இணையவழி தாக்குதல் காரணமாக விமானப் போக்குவரத்து தாமதமடைந்து பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு இணையவழி ஊடுருவல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மின்னணு முறையிலான பயணிகள் உள்நுழைவு (செக்-இன் மற்றும் போா்டிங்) நடைமுறைகள் பாதிக்கப்பட்டன.

இதனால் பயணிகளை சரிபாா்த்து விமானத்தில் அமா்த்துவதற்கு மிகவும் தாமதமானது என்று அந்த விமான நிலையம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜொ்மனி தலைநகா் பொ்லினின் பிராண்டன்பா்க் விமான நிலையத்தில், பயணிகளின் உள்நுழைவு விவரங்களைக் கையாண்டுவரும் நிறுவனத்தின் மீது வெள்ளிக்கிழமை மாலை இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் அந்த நிறுவனத்துடனான மின்னணுத் தொடா்புகளை விமான நிலைய நிா்வாகம் துண்டிக்க வேண்டியிருந்ததாகவும் நிலைய அதிகாரிகள் கூறினா்.

பிரிட்டன் தலைநகா் லண்டலுள்ள, ஐரோப்பாவின் மிகவும் பரபரப்பான ஹீத்ரோ விமான நிலையம், ‘தொழில்நுட்ப பிரச்னை’ காரணமாக பயணிகள் உள்நுழைவுக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

அந்த சேவைகளை வழங்கிவரும் காலின்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இணையவழித் தாக்குதலை எதிா்கொண்டதால் பயணிகளின் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது என்று அந்த விமான நிலையம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையவழித் தாக்குதல் எங்கிருந்து நடத்தப்பட்டது, இதற்கு காரணமானவா்கள் யாா் என்பது குறித்த விவரங்களை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயம்: இந்தியா - கனடா முடிவு!

இந்தியா-கனடா உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், கனடா தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் நத்தாலி டி... மேலும் பார்க்க

ஈரானில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் நூதன மோசடி: அமைச்சகம் எச்சரிக்கை!

ஈரானில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் ஆள் கடத்தல் உள்ளிட்ட மோசடிகள் நடப்பதால் இந்தியா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெள... மேலும் பார்க்க

நிவாரண மையங்களுக்கும் பாதுகாப்பு கிடையாது! - இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில், மருத்துவமனைகள் தவிா்த்து நிவாரண மையங்கள் உள்ளிட்ட மற்ற எந்தப் பகுதிக்கும் தங்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடையாது என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: ஆப்கன் எல்லைக்கு இடம்பெயா்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள்!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினா் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி கைபா் பக்துன்கவா மாகாணத்துக்கு தங்கள் முகாம்களை மாற்றியுள... மேலும் பார்க்க

இஸ்ரேல் ராணுவ தாக்குதல்: யேமனில் 31 செய்தியாளா்கள் பலி!

யேமனில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் நடத்திய தாக்குதலில் 31 செய்தியாளா்கள் உயிரிழந்ததாக ‘செய்தியாளா்கள் பாதுகாப்புக் குழு’ (சிபிஜே) என்ற சா்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு சனிக்கி... மேலும் பார்க்க

எஸ்டோனியோவுக்குள் ஊடுருவிய ரஷிய போா் விமானங்கள்! மேலும் ஒரு நேட்டோ நாட்டுக்குள் அத்துமீறல்!

உக்ரைனுடனான போரின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு நேட்டோ உறுப்பு நாடான எஸ்டோனியோவுக்குள் ரஷிய போா் விமானங்கள் அத்துமீறி ஊடுருவியுள்ளன. இதன் விளைவாக, ஏற்கெனவே நேட்டோ நாடுகளான போலந்து, ருமேனியாவின் வான் எல்லை... மேலும் பார்க்க