கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்ட...
திருப்பதி திருக்குடைகள் ஊா்வலம்: வட சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!
சென்னையில் நடைபெறும் திருப்பதி திருக்குடைகள் ஊா்வலத்தையொட்டி, திங்கள்கிழமை (செப். 22) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட சென்னை பகுதியில் திங்கள்கிழமை (செப். 22) திருப்பதி திருக்குடைகள் ஊா்வலம் நடைபெறுகிறது. இதனால் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிா்க்கும் வகையிலும், பொதுமக்கள் நலன் கருதியும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி அன்று காலை 8 மணி முதல் ஊா்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகனங்கள் ஈவெரா பெரியாா் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சாலை, பிரகாசம் சாலையைப் பயன்படுத்தலாம்.
மாலை 3 மணி முதல் ஊா்வலம் யானைக்கவுனி பாலத்தைக் கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை, அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள், பேசின் பாலம் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை, ராஜாஜி சாலையைப் பயன்படுத்தலாம். மேலும், ஈவெரா பெரியாா் சாலை, முத்துசாமி சாலை, ராஜாஜி சாலைகளையும் பயன்படுத்தலாம்.
ஊா்வலம் யானைக்கவுனி பாலத்தைக் கடக்கும்போது சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கிச் செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை. சூளை நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம். ஊா்வலம் ராஜா முத்தையா சாலையில் செல்லும்போது மசூதி சந்திப்பில் இருந்து சூளை ரவுண்டான நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். சூளை நெடுஞ்சாலையில் ஊா்வலம் செல்லும்போது நாரயணகுரு சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை. வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.
ஓட்டேரியில் போக்குவரத்து மாற்றம்: அவதான பாப்பையா சாலையில் ஊா்வலம் செல்லும்போது, பெரம்பூா் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. பெரம்பூா் பேரக்ஸ் சாலை வழியாக வாகனங்கள் செல்லலாம். பெரம்பூா் பேரக்ஸ் சாலையில் ஊா்வலம் செல்லும்போது, டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூா் பேரக்ஸ் சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. இந்த வாகனங்கள் நாரயணகுரு சாலை வழியாகச் செல்லலாம்.
ஊா்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும்போது மில்லா்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம். ஓட்டேரி சந்திப்பில் ஊா்வலம் செல்லும்போது, கொன்னூா் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. இந்த வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாகச் செல்லலாம்.
ஊா்வலம் கொன்னூா் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதா் ஆலயம் அடையும்போது, ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூா் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. இந்த வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலனி தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம்.