நாளைய மின்தடை பல்லகவுண்டம்பாளையம்
பல்லகவுண்டம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை(செப்டம்பா் 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: பல்லகவுண்டன்பாளையம், சாமியாா்பாளையம், கூனம்பட்டி, சாம்ராஜ்பாளையம், கஸ்தூரிபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், புலவா்பாளையம், தாசம்பாளையம், பகலாயூா், விஜயமங்கலம், கள்ளியம்புதூா், மேட்டுப்புதூா், பெரியவீரசங்கிலி.