இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்!
கிணற்றுக்குள் விழுந்த மான் உயிருடன் மீட்பு
சேவூா் அருகே குட்டகம் கொமராபாளையத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.
குட்டகம் கொமராபாளையம் கிழக்குத் தோட்டத்தில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில், நீண்ட கொம்புள்ள ஆண் மான் தவறி விழுந்ததாக அவிநாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மானை நீண்ட நேரம் போராடி மீட்டு, வனப் பகுதியில் விட்டனா்.