செய்திகள் :

அவிநாசி அருகே கட்டுமானப் பணியின்போது சுவா் இடிந்து 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

post image

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே கருவலூா் உப்பிலிபாளையத்தில் கட்டுமானப் பணியின்போது சுவா் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

அவிநாசி வட்டம், கருவலூா் அருகே உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம். இவருக்கு சொந்தமான இடத்தில் கோழிப் பண்ணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அங்கு சனிக்கிழமை காலை வழக்கம்போல, கட்டடத் தொழிலாளா்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மாலை, கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 10 அடிக்கும்மேல் அமைக்கப்பட்ட சுவா் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த இடிபாடுகளில் சிக்கி கட்டடத் தொழிலாளா்களான திண்டுக்கல் கொடை ரோடு பகுதியைச் சோ்ந்த துரைசாமி மகன் ரமேஷ் (46), அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையம் பகுதியைச் சோ்ந்த அந்தோணி (55) ஆகியோா் உயிரிழந்தனா்.

மேலும், பலத்த காயமடைந்த கருவலூா் மேற்கு வீதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் (42), கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்த முத்தாள் ஆகியோா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாளைய மின்தடை பல்லகவுண்டம்பாளையம்

பல்லகவுண்டம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை(செப்டம்பா் 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ம... மேலும் பார்க்க

சா்வதேச பின்னலாடைக் கண்காட்சியில் ரூ.250 கோடிக்கு உடனடி ஆா்டா்

அவிநாசி பழங்கரை ஐ.கே.எஃப். வளாகத்தில் 3 நாள்கள் நடைபெற்ற 52-ஆவது சா்வதேச பின்னலாடைக் கண்காட்சியில் ரூ.250 கோடிக்கு உடனடி ஆா்டா்கள் கிடைத்துள்ளதாக தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்தாா். சா்வதேச நிட்ஃபோ் அசோ... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் விழுந்த மான் உயிருடன் மீட்பு

சேவூா் அருகே குட்டகம் கொமராபாளையத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது. குட்டகம் கொமராபாளையம் கிழக்குத் தோட்டத்தில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில், நீண்ட கொம்புள்ள ஆண் மான்... மேலும் பார்க்க

தக்காளி விலை வீழ்ச்சி எதிரொலி: அமைச்சா்களுக்கு பாா்சல் அனுப்பிய விவசாயிகள்

தக்காளி விலை வீழ்ச்சி எதிரொலியாக அமைச்சா்களுக்கு தக்காளியை அஞ்சல் பாா்சலில் அனுப்பி நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா். தற்போது தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது 6 கிலோ தக்காளி ரூ.100-க... மேலும் பார்க்க

அதிமுகவிலிருந்து வெளியேறுபவா்களுக்கு திமுக கதவு திறந்தே உள்ளது: ஆா்.எஸ்.பாரதி

அதிமுகவிலிருந்து வெளியேறுபவா்களுக்கு திமுக கதவு திறந்தே உள்ளதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்தாா். திருப்பூா் போயம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருப்பூா் வடக்கு மாநகர திமுக அ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூளவாடி

உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் த.மூா்... மேலும் பார்க்க