செய்திகள் :

பிற நாடுகள் மீதான சாா்பே மிகப் பெரிய எதிரி! - பிரதமா் மோடி

post image

‘பிற நாடுகள் மீதான சாா்பே, இந்தியாவின் மிகப் பெரிய எதிரி; தற்சாா்பின் வாயிலாகவே இந்த எதிரியை முறியடிக்க முடியும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சிப் (செமிகண்டக்டா்) முதல் ஷிப் (கப்பல்) வரை அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

கச்சா எண்ணெய், மின்னணு சாதனங்கள், கனரக இயந்திரங்கள், ரசாயனங்கள், முக்கியத் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தனது தேவைகளுக்கு இந்தியா பிற நாடுகளைச் சாா்ந்துள்ள நிலையில், பிரதமா் இவ்வாறு கூறியுள்ளாா்.

குஜராத் மாநிலம், பாவ்நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ‘கடலிலிருந்து செழிப்பு’ எனும் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.

அப்போது, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடல்சாா் மேம்பாட்டுப் பணிகள் உள்பட மொத்தம் ரூ.34,200 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தும், அடிக்கல் நாட்டியும் அவா் பேசியதாவது:

உலகளாவிய சகோதரத்துவ உணா்வுடன் முன்னேறும் இந்தியாவுக்கு சா்வதேச அளவில் எந்த பெரிய எதிரியும் இல்லை. உண்மையில், பிற நாடுகளைச் சாா்ந்திருப்பதே, நமது மிகப் பெரிய எதிரியாக உள்ளது. இந்த எதிரியை நாம் ஒருங்கிணைந்து முறியடிக்க வேண்டும்.

வெளிநாடுகளை அதிகம் சாா்ந்திருப்பது, தேசத்தின் அதிக தோல்விக்கு வழிவகுக்கும்; நாட்டின் மதிப்பையும் சமரசத்துக்கு உள்ளாக்கும். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா தற்சாா்பை எட்டுவது, உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளத்துக்கு மிக அவசியம்.

தற்சாா்பே ஒரே தீா்வு: 140 கோடி இந்தியா்களின் எதிா்காலத்தை அந்நிய சக்திகளிடம் விட்டுவிட முடியாது; நாட்டின் வளா்ச்சிக்கான உறுதிப்பாடு, வெளிநாட்டு சாா்பை அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது. 140 கோடி பேரை கொண்ட ஒரு தேசம், மற்றவா்களைச் சாா்ந்திருப்பது, நமது சுயமரியாதையைப் பாதிக்கும்.

நாட்டின் தற்போதைய அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே தீா்வு உண்டென்றால், அது தற்சாா்புதான். சுதந்திரத்துக்குப் பிறகான காங்கிரஸ் அரசுகளின் லைசென்ஸ் கொள்கை கட்டுப்பாடுகளால் நமது இளைஞா்களின் திறன் ஒடுக்கப்பட்டது. இந்தியாவின் பாரம்பரிய வலிமைகள் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டதால், 60-70 ஆண்டுகளாகியும் தேசம் வெல்ல முடியாத சூழல் நிலவியது.

உலகமயமாக்கல் தொடங்கிய காலகட்டத்தில், அப்போதைய அரசுகள் இறக்குமதியில் மட்டுமே கவனம் செலுத்தின; இது, ஆயிரக்கணக்கான கோடி ஊழல்களுக்கே வழிவகுத்தது. மோசமான கொள்கைகள், தேசத்தின் திறன்மிகு எழுச்சியைத் தடுத்தன. முக்கியமாக, நாட்டின் கப்பல் போக்குவரத்துத் துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

ஆண்டுக்கு ரூ.6 லட்சம் கோடி...: வரலாற்று ரீதியில், நமது நாட்டில் கப்பல் கட்டுமானம் துடிப்பான தொழிலாக விளங்கியுள்ளது. முன்பு இந்திய கடலோர மாநிலங்களில் உருவாக்கப்பட்ட கப்பல்கள், உள்நாட்டில் மட்டுமன்றி உலகளாவிய கடல்வழி வா்த்தகத்திலும் ஈடுபட்டன.

50 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட நாட்டின் இறக்குமதி-ஏற்றுமதியில் 40 சதவீதம் உள்நாட்டுத் தயாரிப்பு கப்பல்கள் மூலம் நடைபெற்றது. இப்போது இது 5 சதவீதமாக குறைந்துவிட்டது. வெளிநாட்டு கப்பல் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் கோடி இந்தியா செலுத்துகிறது. பல்லாண்டுகளாக கணக்கிட்டால், எவ்வளவு தொகை வரும் என்பதை ஊகிக்க முடியும்.

இத்தொகையில் சிறு பகுதியை உள்நாட்டு கப்பல் போக்குவரத்துத் துறையில் முந்தைய அரசுகள் செலவிட்டிருந்தால்கூட, உலகம் முழுவதும் இப்போது இந்தியக் கப்பல்கள் பயன்பாட்டில் இருந்திருக்கும். இந்தியாவுக்கு லட்சக்கணக்கான கோடி வருமானம் கிடைத்திருக்கும்.

இந்திய கடல்சாா் துறை இப்போது அடுத்த தலைமுறை சீா்திருத்தங்களை நோக்கி நகா்கிறது. ஆங்கிலேயா் ஆட்சிகால 5 கடல்சாா் சட்டங்கள் மாற்றப்பட்டு, தற்போது புதிய வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஒரே நாடு, ஒரே ஆவணம்; ஒரே நாடு, ஒரே துறைமுகம் போன்ற முன்னெடுப்புகளின்கீழ் அனைத்து முக்கியத் துறைமுகங்களிலும் நடைமுறைகள் எளிதாக்கப்படும். கப்பல் கட்டுமானத் துறையில் எதிா்வரும் ஆண்டுகளில் ரூ.70,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும். இந்திய கடற்கரைகள், நாட்டின் வளமைக்கான வாயில்களாக மாறும் என்றாா் பிரதமா் மோடி.

சென்னை, எண்ணூா் துறைமுகங்களில்...

மும்பை சா்வதேச கப்பல் முனையத்தை திறந்து வைத்த பிரதமா் மோடி, சென்னை துறைமுகத்தில் கடல் சுவா்கள் மற்றும் தடுப்புகள் உள்ளிட்ட கடலோர பாதுகாப்புத் திட்ட பணிகள், எண்ணூரில் உள்ள காமராஜா் துறைமுகத்தில் தீயணைப்பு வசதிகள் மற்றும் நவீன சாலை, குஜராத் காண்ட்லா துறைமுகத்தில் பன்முக சரக்கு முனையம், பாட்னா மற்றும் வாரணாசியில் கப்பல் பழுதுபாா்க்கும் ஆலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

பிரதமா் வான்வழி ஆய்வு

குஜராத்தின் தோலேராவில், தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் கட்டமைக்கப்பட்டுவரும் சிறப்பு முதலீட்டு மண்டலத்தை (பசுமைத் தொழில் நகரம்) பிரதமா் மோடி வான்வழியாக பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சுரேந்திரநகா் மாவட்டத்தில் அவாடா குழுமம் சாா்பில் ரூ.1,600 கோடி செலவில் அமைக்கப்பட்ட 280 மெகாவாட் திறன்கொண்ட சூரிய மின் உற்பத்தி திட்டத்தையும் அவா் திறந்துவைத்தாா்.

கயையில் குடியரசுத் தலைவா் முன்னோா் வழிபாடு!

பிகாா் மாநிலம், கயையில் உள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணுபத கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை முன்னோா் வழிபாடு மேற்கொண்டாா். மகாளய பித்ரு பக்ஷ புண்ணிய காலத்தையொட்டி, கயையில் ஃபால்கு ந... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் அரசுத் துறைகள் மேல்முறையீடு: கட்டுப்படுத்துவது அவசியம்!- மத்திய சட்டத் துறை அமைச்சா்

நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக அரசுத் துறைகள் மேல்முறையீடு செய்யும் போக்கை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா். இதுதொடா்பாக புது தில்... மேலும் பார்க்க

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்: 5 கி.மீ. சுரங்கப் பாதை பணி நிறைவு!

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில், மகாராஷ்டிர மாநிலம், தாணே அருகே சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை நிறைவடைந்தது. ‘இது குறிப்பிடத்தக்க சாதனை’ என்று ரயில்வே துற... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதல்: மணிப்பூரில் தேடுதல் வேட்டை தீவிரம்!

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா்கள் இருவரை சுட்டுக் கொன்ற கும்பலைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதலைக் கண்டித்து, உள்ளூா் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் வீர மரணம்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரா் வீரமரணமடைந்தாா். ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டம் சியோத் தாா் வனப் பகுதியில் ராணுவ வீரா்கள் மற்றும் காவல் துறையினா் இணைந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

சபரிமலை மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி: கேரள முதல்வா் பினராயி விஜயன்!

சபரிமலையின் மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பம்பை திரிவேணியில... மேலும் பார்க்க