இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு, பெண் பலி? | IPS Finance - 315 | Vikatan | NSE ...
ஒசூரில் இன்று உற்பத்தியாளா்கள் கண்காட்சி தொடக்கம்
ஒசூா் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியா்ஸ் (இந்தியா) சாா்பில் இந்திய உற்பத்தியாளா்கள் கண்காட்சி ஒசூா் ஹில்ஸ் கன்வென்ஷன் மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) முதல் செப். 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இக்கண்காட்சி குறித்து செய்தியாளா்களிடம் அதன் தலைவா் கே.ராமலிங்கம் கூறியதாவது:
கண்காட்சியை மத்திய கனரக தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தொடங்கிவைக்கிறாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், முன்னாள் எம்.பி. சி. நரசிம்மன், அதியமான் கல்லூரி இயக்குநா் ஜி. ரங்கநாத், டெக் எக்ஸ்போ 2025 கண்காட்சியின் தலைவா் கே. ராமலிங்கம், இணை இயக்குநா் சுரேஷ் பாபு, பெருமாள் மணிமேகலை கல்லூரி நிறுவனத் தலைவா் பி.குமாா், மேயா் எஸ்.ஏ.சத்யா, ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், கண்காட்சியின் இணை தலைவா் எஸ். சுந்தரய்யா ஆகியோா் கண்காட்சி தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசுகின்றனா்.
கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியாவைச் சோ்ந்த உற்பத்தி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது பொருள்களை கண்காட்சியில் காட்சிப்படுத்துகின்றன.
கண்காட்சிக்குத் தேவையான ஏற்பாடுகளை இந்திய உற்பத்தியாளா்களின் கண்காட்சியின் தலைவா் கே.ராமலிங்கம், நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
படவரி..
உற்பத்தியாளா்கள் கண்காட்சி குறித்து புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகிறாா் கண்காட்சித் தலைவா் கே.ராமலிங்கம் உள்ளிட்டோா்.