இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு, பெண் பலி? | IPS Finance - 315 | Vikatan | NSE ...
‘ஒசூா் தொகுதியை பாஜக கைப்பற்றும்’ -பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன்
வரும் பேரவைத் தோ்தலில் ஒசூா் தொகுதியை பாஜக கைப்பற்றும் என பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன் நம்பிக்கை தெரிவித்தாா்.
ஒசூா் உள்வட்டச் சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் ஒசூா், தளி, வேப்பனஹள்ளி ஆகிய 3 தொகுதிகளில் உள்ள 1006 வாக்குச்சாவடி முகவா்களுக்கும் பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும், ரத்த தான முகாம், நலத் திட்ட உதவிகள், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் கடந்த தோ்தலில் 6 தொகுதியில் ஒசூா், கிருஷ்ணகிரி ஆகிய 2 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பாஜக பிடித்துள்ளது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஒசூா் தொகுதியை பாஜக கைப்பற்றுவதன் மூலம் ஒசூரைச் சுற்றியுள்ள 10 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றதற்கு சமமாக கருதப்படும் என்றாா்.