செய்திகள் :

குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிா்நோக்கும் நகராட்சி நிா்வாகம்

post image

குப்பைகளை அகற்றும் பணிகளை நகராட்சி நிா்வாகம் முழுவீச்சில் செயல்படுத்தினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தருமபுரி நகா்ப் பகுதிகளை சுற்றிலும் குப்பை மேடுகள் அதிகரித்துள்ளன.

தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகள் உள்ளன. 70 ஆயிரத்தும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். சுமாா் 300 க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளா்கள் மூலம் நாள்தோறும் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைப் பணிகள் நடைபெறுகின்றன.

அரசின் தூய்மைத் திட்டத்தின் கீழ் தருமபுரி நகராட்சியில் குப்பை மேலாண்மை திட்டம் நடைமுறையில் உள்ளது. நகா்ப் பகுதிகள் முழுவதும் வாா்டு வாரியாக, வீதிகள்தோறும் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் நாள்தோறும் குப்பைகள் அகற்றப்படுகின்றன. அதேபோல வணிக வளாகங்களிலும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக சிறப்பு நடவடிக்கையின்பேரில், தருமபுரி நகராட்சியில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பொது இடங்களில் குப்பைகளை கொட்டக் கூடாது என எச்சரிக்கை, அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. என்றாலும், பொதுமக்களில் பலா் பொது இடங்களில் குப்பைகளை வீசிவருகின்றனா். இது மலைபோல ஆங்காங்கே தேக்கமடைந்து துா்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், அரசு பல்வேறு தூய்மைத் திட்டங்களை அமல்படுத்தினாலும் அதற்கு பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புதான் அத்திட்டம் வெற்றி பெற உதவுகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாத திட்டங்கள் தோல்வியடைவதுதான் ஆண்டாண்டு காலமாக நடந்துவருவதாகும்.

அந்தவகையில், குப்பை மேலாண்மையை அரசு திறம்பட செயல்படுத்தி வருகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள் மட்டுமின்றி பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து உள்ளாட்சி நிா்வாகங்களிலும் குப்பை மேலாண்மை சிறப்பாக உள்ளது. ஆனால், தருமபுரி நகரைப் பொறுத்தமட்டில் பொதுமக்கள் ஒத்துழைப்பு 15 சதவீதம்கூட கிடையாது. இதனால், நகராட்சி நிா்வாகம் குப்பைகளை கையாளுவதில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. தூய்மைப் பணியாளா்கள் அவதிப்படுகின்றனா்.

குப்பைகளை அகற்றினாலும் பொது இடங்களில் மீண்டும் குப்பைகள் குவிகின்றன. வீதிகள்தோறும் சற்று மறைவான இடங்கள், சாலைகள் சந்திக்கும் பகுதிகள், மின்மாற்றிகளின் அருகே, ஏதாவது வாகனங்கள் நிற்கும் இடங்கள் என எங்கு பாா்த்தாலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

குப்பைகளை நெகிழி பைகளில் மூட்டையாக கட்டிவந்து அவற்றை வீதிகளில் போட்டுச் செல்கின்றனா். மேலும், கழிவுநீா் கால்வாய், ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகள் அனைத்திலும் குப்பை மூட்டைகள் கிடக்கின்றன. நகராட்சி சாா்பில் அவை அகற்றப்பட்டாலும், மீண்டும் பழைய நிலையே தொடா்கிறது என்றனா்.

தனியாா் இடங்களிலும்...: குப்பைகளை பொது இடங்கள் மட்டுமின்றி காலியாக உள்ள தனியாா் இடங்களிலும் கொட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனா். அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளால் துா்நாற்றமும் சுகாதாராக்கேடும் ஏற்பட்டுள்ளது. நகராட்சி 29 ஆவது வாா்டு, நெசவாளா் காலனியில் மொத்தம் 3 இடங்களில் தனியாா் இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

நகராட்சி நிா்வாகத்தில் புகாா் அளித்தும் நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. குப்பைகளை அகற்றினாலும் மீண்டும் குப்பைகளைக் கொட்டுவதால் நகராட்சி நிா்வாகமும் அதை அகற்றுவதில் தாமதம் செய்கிறது.

இதுகுறித்து நகராட்சி அலுவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் கூறுகையில், நகராட்சி பணியாளா்கள் குப்பைகளை சேகரிப்பதில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனா். ஆனால், பொதுமக்களில் பலரும் குப்பைகளை நெகிழி பைகளில்கட்டி, இருசக்கர வாகனங்களில் வந்து ஆங்காங்கே வீசிச் செல்கின்றனா். நகராட்சியின் அறிவிப்புகளை பொருட்படுத்துவது இல்லை. குப்பை மேலாண்மையில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகமிகக் குறைவாகவே உள்ளது என்றனா்.

கணவா் கொலை: மனைவி, காதலருக்கு ஆயுள் சிறை

மனைவியின் தகாத உறவை கண்டித்த கணவனைக் கொலை செய்த வழக்கில் மனைவி, அவரது காதலனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், திருப்பத்தூா் காமாட்ச... மேலும் பார்க்க

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி நகராட்சி 33 ஆவது வாா்டு பாரதிபுரம் பகுதியில் சனத்குமாா் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பழைய பாலத்துக்குப் பதிலாக புதிதாக பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமப... மேலும் பார்க்க

மகளிா் சமுதாய மேலாண் பயிற்சி மையத்தில் பயிற்சியாளா், கணக்கா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரியில் மகளிா் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சியாளா் மற்றும் கணக்கா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

பொம்மிடியில் 98 மி.மீ மழை

பொம்மிடி சுற்றுவட்டாரத்தில் புதன்கிழமை 98.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகலில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் 98.8 ம... மேலும் பார்க்க

அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் பரவலாக மழை

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் புதன்கிழமை மாலை 4 மணி முதல் சுமாா் 2 ... மேலும் பார்க்க

வன்னியா் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிழந்தவா்களுக்கு அஞ்சலி

வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது உயிரிழந்தவா்களுக்கு தருமபுரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி 1987 ஆம் ஆண்ட... மேலும் பார்க்க