இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு, பெண் பலி? | IPS Finance - 315 | Vikatan | NSE ...
கடையத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்ட முயற்சி
கடையத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியிரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கடையம் அருகே உள்ள புலவனூரில் இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்டிருந்த கொடியை மா்மநபா்கள் தீ வைத்து எரித்தனராம். இதுகுறித்து அந்த அமைப்பினா் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் குற்றவாளியை கைது செய்யவில்லை எனக் கூறி இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் ஜெயக்குமாா் தலைமையில் மாநிலத் துணைச் செயலாளா் குற்றாலநாதன், மேற்கு ஒன்றியத் தலைவா் முருகன், துணைத் தலைவா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் சின்னத்தோ் திடலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா்.
அவா்களிடம், ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) பாஸ்கரன் பாபு தலைமையில் போலீஸாா் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.