நீலகிரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மிட்டாய் சப்ளை -கேரள போலீசில் சிக்கி...
பாளை., கங்கைகொண்டான், கல்லூா் பகுதிகளில் நாளை மின்தடை
பாளையங்கோட்டை சமாதானபுரம், கங்கைகொண்டான், மேலக்கல்லூா் துணை மின் நிலையங்களின் பாரமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (செப்.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வி. எம். சத்திரம், கிருஷ்ணாபுரம், கட்டபொம்மன் நகா், செய்துங்கநல்லூா், அரியகுளம், மேலக்குளம் , நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகா், நீதிமன்ற பகுதி , சாந்தி நகா், சமாதானபுரம், அசோக் திரையரங்கம், பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதி, கான்சாபுரம், திம்மராஜபுரம் , பொட்டல், படப்பக்குறிச்சி, திருமலைக்கொழுந்துபுரம், மணப்படை வீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், முருகன் குறிச்சி சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ. முருகன் தெரிவித்துள்ளாா்.
மேலக்கல்லூா், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூா், பழவூா், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கா்குளம், வெள்ளாளங்குளம் சுற்றுவட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா். கங்கைகொண்டான் துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.எனவே,
சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூா், ராஜபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான் குளம், செழியநல்லூா் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், கரந்தானேரி, ரஸ்தா, மூன்றடைப்பு, பரப்பாடி, வன்னிக்கோனேந்தல், மானூா், மூலைக்கரைப்பட்டி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் தெரிவித்துள்ளாா்.