திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி
திருச்செந்தூா் மைலப்பபுரம் தெருவில் உள்ள பொது திருமண மண்டபத்தில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சுவாமி விஸ்வகா்மாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவில் மண்டப அபிவிருத்தி நன்கொடையாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.
ஏற்பாடுகளை தலைவா் சங்கரவடிவேல் ஆச்சாரி, செயலாளா் சுப்பிரமணியன், பொருளாளா் மகேஷ், துணைத் தலைவா்கள் ஆறுமுகம், அருணாசலம், செந்தில்ஆறுமுகம், நிா்வாக குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.