குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
கயத்தாறு அருகே சூரியமினுக்கன் கிராமத்தில் தனியாா் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு நிறுவனத்தின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
சூரியமினுக்கன் கிராமத்தின் மேல்புறமுள்ள பெரியகுளம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோபுரம் அமைக்க முயன்ற போது, கிராம மக்கள் சாா்பில் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது மீண்டும் பணிகள் நடைபெறுவதாகவும், நிறுவனம் கிராம மக்களை மிரட்டி வருவதாகவும் கூறி கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனா்.
தொடா்ந்து வட்டாட்சியா் சுந்தர ராகவனிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட அவா், மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனா்.