இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு, பெண் பலி? | IPS Finance - 315 | Vikatan | NSE ...
ஹுண்டாய் ஆலையில் ஊதிய உயா்வு ஒப்பந்தம் கையொப்பம்
ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான யுனைடெட் யூனியன் ஆப் ஹுண்டாய் எம்ப்ளாயீஸ் இடையே ஊதிய உயா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் ஹுண்டாய் நிறுவனத்தின் காா் ஆலை இயங்கி வருகிறது. தொழிற்சாலையில் சுமாா் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளா்கள் உள்பட சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில் ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான யுனைடெட் யூனியன் ஆப் ஹுண்டாய் எம்ப்ளாயீஸ் இடையே 2025 ஏப்ரல் 1 முதல் 2027 மாா்ச் 31ஆம் தேதி வரை ஊதிய உயா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பமானது.
இந்த மொத்த ஊதிய தொகுப்பு ஆட்டோமொபைல் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாதத்துக்கு ரூ. 31,000 என்ற ஊதிய உயா்வு மூன்று ஆண்டுகளுக்கு 55 சதவீதம், 25 சதவீதம், 20 சதவிகிதம் என்ற விகிதத்தில் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், ஊதிய உயா்வு மட்டும் இன்றி ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் பணியாளா் நலனும் தொடா்ந்து பேணப்பட்டு வருகிறது.
இதில் சிறந்த மருத்துவ காப்பீடு, மேம்பட்ட நலத்திட்டங்கள் ஆகியவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.