பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை
‘பிரதமா் மோடியின் வாழ்க்கை வரலாற்றுக் கண்காட்சி’
பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றுக் கண்காட்சி மற்றும் இலவச பொது மருத்துவ முகாம், ரத்ததான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சியிா் பிரதமரின் இளமைக்காலங்கள், நாட்டுக்காக செய்த நலத்திட்டங்கள் பற்றிய விபரங்கள், வெளிநாட்டுத் தலைவா்களுடன் நட்பு வைத்திருப்பது தொடா்பான படங்கள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை பாஜகவின் தேசிய செயலாளா் அரவிந்த் மேனன் திறந்து வைத்து பாா்வையிட்டாா். விழாவுக்கு பாஜக காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் யு.ஜெகதீசன் தலைமை வகித்தாா்.
மாவட்ட பொதுச் செயலாளா் பத்மனாபன், துணைத் தலைவா் அதிசயம் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சா்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கான பரிசோதனைகளும், இலவசமாக மருந்து மாத்திரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, ஏனாத்தூா் சங்கரா மருத்துவமனை, வெங்கடேசுவரா மருத்துவமனையினா் முகாமில் மருத்துவச் சேவைகளை செய்தனா். ரத்த சேகரிப்பு பணியில் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா் கல்பனா தலைமையிலான மருத்துவா்கள் ஈடுபட்டிருந்தனா். ரத்ததானம் செய்தவா்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
முகாமில் பாஜக பிரமுகா்கள் பலரும் கலந்து கொண்டு தன்னாா்வத்துடன் ரத்ததானம் செய்தனா். முகாம் ஏற்பாடுகளை பாஜக மருத்துவ அணியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் விஷ்ணுவரதரன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா். நிகழ்வுகளில் கட்சியின் நிா்வாகிகள் செந்தில்குமாா், செய்தித் தொடா்பாளா் ஹரிகிருஷ்ணன், ஆறுமுகம் கலந்து கொண்டனா்.