முக்கியமான தருணத்தில் சாம்பியன் ஆகியிருக்கிறேன் - ஆா்.வைஷாலி
கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 7 நாள்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு 7 நாள்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக தொழிலாளா் நல உதவி ஆணையா் பா.லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்து வாரிய பதிவு நடப்பில் உள்ள தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையுடன் இணைந்து 7 நாள்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மேசன், காா்பெண்டா், எலெக்டிரீசியன், பாா்பெண்டா், பிளம்பா், வெல்டா், கொல்லா், ஏ.சி. மெக்கானிக், கண்ணாடி வேலை, பெயிண்டா், டைல் லேயா் ஆகிய 11 பிரிவுகளில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
மஸ்தூா் தொழில் இனத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்கள் மேற்படி ஏதாவது ஒரு தொழில் இனத்தில் பயிற்சி பெறலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 650 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி விரைவில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்பவா்களுக்கு பயிற்சி சான்றிதழ், மதிய உணவு ஆகியவை வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் நாள் ஒன்றுக்கு ரூ. 800 வீதம் 7 நாள்களுக்குமான உதவித்தொகை மொத்தம் ரூ. 5,600 தொழிலாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பயிற்சி பெற விரும்பும் கட்டுமானத் தொழிலாளா்கள் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் (ஆதாா் நகல், நல வாரிய அட்டை நகல், பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம், வங்கிக் கணக்குப் புத்தக நகல்) காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைந்துள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (ச.பா.தி)அலுவலகத்தில் சமா்ப்பித்து பயன் பெறலாம்.