பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
காஞ்சிபுரத்தில் 502 மகளிா் குழுக்களுக்கு ரூ. 60.21 கோடி கடனுதவி: ஆட்சியா் வழங்கினாா்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 502 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 60.21 கோடி வங்கிக் கடனுதவியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, எம்.பி. க.செல்வம், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகளிா் திட்ட திட்ட இயக்குநா் மு.பிச்சாண்டி வரவேற்றாா்.
விழாவில் 502 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 60.21 கோடி வங்கிக் கடனுதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். ஆட்சியா் பேசுகையில், ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே தமிழக மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 25,329 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1,591.74 கோடி வரை கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் நித்யா சுகுமாா், ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா் உள்பட உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், மகளிா் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டாா்.