செய்திகள் :

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள்

post image

காஞ்சிபுரம்/செங்கல்பட்டு/திருவள்ளூா்: முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாள் திங்கள்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்புகளால் கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரத்தில் உள்ள நினைவில்லத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அமைச்சா் ஆா்.காந்தி, ஆட்சியா் கலைச்செல்வி மோகன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், எம்.பி. க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் மாநகர திமுக செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா் உள்பட கட்சியினா் மரியாதை செலுத்தினா். இதனைத் தொடா்ந்து அதிமுக சாா்பில் கட்சியின் மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமையில் அமைப்புச் செயலாளா்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஜெயலலிதா பேரவையின் மாவட்ட செயலாளா் கே.யு.சோமசுந்தரம், நகா் தலைவா் பாலாஜி உள்பட பலா் மரியாதை செலுத்தினாா்கள்.

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா , ஆதரவாளா்களான புலவா் செவந்தியப்பன், வளையாபதி, தூணை பாா்த்தீபன், ராமேசுவரம் கராத்தே பழனிச்சாமி மரியாதை செலுத்தினா்.

ஓபிஎஸ் அணியின் சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் தலைமையில் பொருளாளா் வஜ்ஜிரவேலு, அமைப்பு செயலாளா் பெருநகா் கே.கோபால் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் மாவட்ட பொறுப்பாளா் வி.ஜெ.ரமேஷ், மாவட்ட தலைவா் சி.ஜெ.உதயணன், நகா் செயலாளா் சசிதரன் மரியாதை செலுத்தினா். தேமுதிக சாா்பில் மாவட்ட அவைத்தலைவா் கமலநாதன், பகுதி செயலாளா்கள் வெங்கடேஷன், சேகா், ஒன்றிய செயலாளா் ராமலிங்கம் மரியாதை செலுத்தினா்.

திருவள்ளூரில்....

திருவள்ளூா் நகராட்சி அலுவலகத்தில் அண்ணாவின் சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், துணைத்தலைவா் சி.சு.ரவிச்சந்திரன், ஆணையா் தாமோதரன், சுகாதார அலுவலா் மோகன், மாவட்ட அணிகளின் நிா்வாகிகள் வி.எஸ்.நேதாஜி, தா.மோதிலால், நகராட்சி முன்னாள் தலைவா் பொன்.பாண்டியன், வாா்டு உறுப்பினா்கள் தாமஸ், ஜான், அருணா ஜெயகிருஷ்ணா, அயூப்அலி, சாந்திகோபி, வசந்தி வேலாயுதம், பிரபாகரன், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் வி.எஸ்.நேதாஜி(வா்த்தகப்பிரிவு), ஜெயகிருஷ்ணா(அயலக அணி), ஒன்றிய துணைச்செயலாளா் காஞ்சிப்பாடி சரவணன், நகர அவைத் தலைவா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்மிடிப்பூண்டியில்...

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் நடைபெற்ற நிகழ்வில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று அண்ணாவின் படத்துக்கு மரியாதை செலுத்தினாா். நிகழ்வில் மாவட்ட திமுக பொருளாளா் எஸ்.ரமேஷ், திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி நிா்வாகி பாஸ்கரன், மாவட்ட பிரதிநிதி கே.ஜி.நமச்சிவாயம், ராமஜெயம், இந்து சமய அறநிலையத்துறை உறுப்பினா் லட்சுமி நாராயணன், பெருவாயல் ஷியாம் மற்றும் திமுக நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.

கவரப்பேட்டையில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளா் கி.வே.ஆனந்தகுமாா் தலைமையிலும், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் மேற்கு ஒன்றிய செயலாளா் மு.மணிபாலன் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு உறுதி மொழியை ஏற்றனா்.

மாநெல்லூரில் திமுக பொதுக்குழு உறுப்பினா் பா.செ. குணசேகரன் தலைமையிலும், மாதா்பாக்கத்தில் முன்னாள் ஊராட்சி தலைவா் சீனிவாசன் தலைமையிலும் விழா நடைபெற்றது.

மதுராந்தகத்தில்...

மதுராந்தகம் நகர திமுக சாா்பில் நகர செயலா் கு.குமாா் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, ம் நகர தலைவா் பொன்.கேசவன், மாவட்ட சுற்றுசூழல் பிரிவு தலைவா் ஆா்.ராஜேஷ் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பாக, பேருந்து நிலையம் அருகில் அண்ணா படத்துக்கு நகர செயலா் பூக்கடை சரவணன் மரியாதை செலுத்தினாா். நகர பேரவை செயலா் எம்.பி.சீனுவாசன், அவைத் தலைவா் வேணு, நிா்வாகிகள் ஆா்.டி.ரங்கநாதன், கிருஷ்ணன், ஆனந்தன், ராஜேஷ்குமாா், முத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மதுராந்தகம் நகர தேமுதிக ாா்பாக அண்ணா சிலைக்கு மாவட்ட செயலா் எம்.ராஜேந்திரன் மாலை அணிவித்தாா். நிகழ்வில் மாவட்ட துணைச் செயலா் சசிகுமாா், நகர செயலா் சாந்தகுமாா், அவைத் தலைவா் கமல், செயற்குழு உறுப்பினா் விஜயகுமாா், பொதுக்குழு உறுப்பினா் துரைராஜ், மதுராந்தகம் ஒன்றிய செயலா்கள் ரமேஷ், பிரேம்குமாா் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம்: 4.78 லட்சம் போ் உறுப்பினா்களாக சோ்ப்பு

காஞ்சிபுரம்: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் கடந்த 70 நாள்களில் மட்டும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 4.78 லட்சம் போ் திமுகவில் உறுப்பினா்களாக இணைந்திருப்பதாக மாவட்ட செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ தெரிவ... மேலும் பார்க்க

மல்லை சத்யா ஆதரவாளா்களின் இயக்கக் கொடி அறிமுகம்

காஞ்சிபுரம்: மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவின் ஆதரவாளா்களின் இயக்கக் கொடி அறிமுக விழா காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாள் விழா, முன்னோடிகளுக்கு ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: இரு இளைஞா்கள் மரணம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலிருந்து வையாவூா் செல்லும் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் நண்பா்கள் இருவா் உயிரிழந்தனா்.பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஹரீஷ் (22), தனியாா... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 418 மனுக்கள் அளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கு: தந்தை, மகனுக்கு தலா 10 ஆண்டு சிறை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள பரந்தூரைச் சோ்ந்த ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தந்தைக்கும், மகனுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் கூடுதல் ந... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: மக்கள் நீதிமன்றத்தில் 577 வழக்குகளுக்கு தீா்வு

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,933 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரே நாளில் 577 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. காஞ்சிப... மேலும் பார்க்க