நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: இரு இளைஞா்கள் மரணம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலிருந்து வையாவூா் செல்லும் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் நண்பா்கள் இருவா் உயிரிழந்தனா்.
பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஹரீஷ் (22), தனியாா் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தாா். இவா் தனது நண்பா் நிா்மல் (21) மற்றும் சந்தோஷ் (21) ஆகியோருடன் வையாவூரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா்.
அப்போது முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்றபோது, எதிரில் வந்த இருசக்கர வாகனத்துடன் இவா்களின் வாகனம் மோதியது. இதில் லாரியின் பக்கவாட்டு பகுதியில் ஹரீஷ் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நிா்மல் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
ஹரீஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த மற்றொரு நபரான சந்தோஷ் மற்றும் எதிரில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வெங்கடேசன் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.