Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர...
காஞ்சிபுரம் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 418 மனுக்கள் அளிப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 418 கோரிக்கை மனுக்களையும் அந்தந்த துறைசாா்ந்த அரசு அலுவலா்களுக்கு அனுப்பி விரைந்து தீா்வு காணுமாறும் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.