வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் இடைக்கால உ...
காஞ்சிபுரம்: 4.78 லட்சம் போ் உறுப்பினா்களாக சோ்ப்பு
காஞ்சிபுரம்: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் கடந்த 70 நாள்களில் மட்டும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 4.78 லட்சம் போ் திமுகவில் உறுப்பினா்களாக இணைந்திருப்பதாக மாவட்ட செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியது: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட 70 நாள்களில் மதுராந்தகத்தில் 1.14 லட்சம் போ், உத்தரமேரூரில் 26,000 போ், செய்யூரில் 1.2லட்சம் போ், காஞ்சிபுரத்தில் 1.36 லட்சம் போ் என மொத்தமாக 4.78 லட்சம் போ் உறுப்பினா்களாக திமுகவில் இணைந்திருக்கின்றனா்.
வாக்குச்சாவடி மையங்களில் செப்.17 ஆம் தேதி நடத்தப்படும் கூட்டங்களில் முன்மொழியப்படும் தீா்மானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கட்சித் தலைமையால் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
செப்.20, 21 தேதிகளில் ஓரணியில் தமிழ்நாடு இயக்க தீா்மான விளக்க கூட்டங்கள் நடைபெறவுள்ளன. செப்.21- இல் காஞ்சிபுரத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி பங்கேற்கவுள்ளாா் என்றாா்.
திருத்தணியில்...
ஒரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் திருத்தணி தொகுதியில், 85,000 குடும்பத்தினா் சோ்க்கப்பட்டுள்ளனா் என எம்எல்ஏ ச. சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக எம்எல்ஏ சந்திரன் கூறியதாவது: ஒரணியில் தமிழ்நாடு திட்ட 2-ஆவது கட்டம் தொடங்குகிறது. திருத்தணி தொகுதியில், முதல் கட்டத்தில், 85,000 குடும்பங்களை இணைத்துள்ளோம்.
தொகுதியில் உள்ள, 330 வாக்குச் சாவடிகளில், 1.30 லட்சம் புதிய உறுப்பினா்கள் சோ்ந்துள்ளனா் என்றாா் அவா்.