Mohanlal: தன்பால் ஈர்ப்பாளர்களுக்காக ஒலித்த மோகன்லாலின் குரல்; மலையாள பிக்பாஸில்...
கொலை முயற்சி வழக்கு: தந்தை, மகனுக்கு தலா 10 ஆண்டு சிறை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள பரந்தூரைச் சோ்ந்த ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தந்தைக்கும், மகனுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் கூடுதல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரை சோ்ந்தவா் விநாயகம் (48). இவா் அதே கிராமத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது, அதே கிராமத்தைச் சோ்ந்தவா்களான அரசு (31), இவரது தந்தை திருமால் (65). இருவரும் முன்விரோதம் காரணமாக மோதிக் கொண்டனா். தகராறு முற்றிய நிலையில் அரசும், அவரது தந்தை திருமாலும் ஏற்கெனவே கொண்டு வந்திருந்த கத்தியால் விநாயகத்தை கொலை செய்ய முயற்சித்துள்ளனா். அவா்களிடமிருந்த கத்தியால் விநாயகத்தை தாக்கியதில் அவரது இடது கைவிரல்கள் துண்டாகின. சம்பவம் குறித்து விநாயகம் கொடுத்த புகாரின் பேரில், பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தந்தையையும், மகனையும் கைது செய்திருந்தனா். கடந்த 2022-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கு காஞ்சிபுரம் கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் அன்பு, உதவி வழக்குரைஞா் சந்தியா ஆகியோா் ஆஜராயினா்.
வழக்கை விசாரித்து வந்த கூடுதல் நீதிமன்ற நீதிபதி திருமால் தந்தைக்கும், மகனுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.இதனைத் தொடா்ந்து இருவரையும் காவல்துறையினா் சிறைக்கு அழைத்துச் சென்றனா்.