செய்திகள் :

Mohanlal: தன்பால் ஈர்ப்பாளர்களுக்காக ஒலித்த மோகன்லாலின் குரல்; மலையாள பிக்பாஸில் என்ன நடந்தது?

post image

2025ம் ஆண்டிற்கான மலையாளம் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையும் மலையாள நடிகர் மோகன்லால்தான் தொகுத்து வழங்குகிறார்.

இந்த சீசனில் அதிலா (Adhila Nasarin) மற்றும் நூரா (Fathima Noora) இருவரும் தன்பால் ஈர்ப்பாளர்கள் என மலையாள பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன.

சகப்போட்டியாளரான லஷ்மி என்பவர் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து, “இவையெல்லாம் நம் சமுதாயத்தில் வரவேற்கக்கூடாது. இவற்றை பிக்பாஸ் போன்ற சர்வதேச பொது மேடைகளில், நிகழ்ச்சிகளில் ‘நார்மலைஸ்’ செய்ய வேண்டியதில்லை. அவர்களை யாரும் வீட்டில்கூட சேர்க்க மாட்டார்கள்" என்று பிக்பாஸ் வீட்டிற்குள் பேசியிருக்கிறார்.

மோகன்லால்
மோகன்லால்

இந்நிலையில் வார இறுதியில் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பேசிய மோகன்லால், தன் ஈர்ப்பாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய போட்டியாளர் லஷ்மியைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் மோகன்லால், "தன்பால் ஈர்ப்பாளர்களாக இருப்பதும், எதுவாக இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம். இதைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது.

யாராக இருந்தாலும் எல்லோரும் மனிதர்கள்தான், எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் இங்கு வாழ்வதற்கு உரிமை இருக்கிறது.

நீங்கள் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறலாம்

உங்களுக்கு தன்பால் ஈர்ப்பாளர்கள் விஷயத்தில் உடன்பாடில்லை என்கிறீர்கள். நானும், இந்த நிகழ்ச்சியும் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவான கருத்தையே உறுதியாக வெளிப்படுத்துகிறோம்.

உங்களுக்கு உடன்பாடில்லாத கருத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியில் ஏன் நீங்கள் பங்கேற்கிறீர்கள்? அவர்களை யாரும் வீட்டில் சேர்க்க மாட்டார்கள் எனச் சொல்ல உங்களுக்கென்ன உரிமை உள்ளது? நான் அவர்களை என் வீட்டிற்குள் விடுவேன் உங்களால் அவர்களுடன் இருக்க முடியாவிட்டால், நீங்கள் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறலாம்” என்று மோகன்லால் கண்டித்துப் பேசியிருக்கிறார்.

தன்பால் ஈர்ப்பாளர்கள், LQBTQக்கு ஆதரவான மோகன்லாலின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பாராட்டைப் பெற்று வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கிறேன்; எனக்கும்'' - திருநங்கை புகாருக்கு நாஞ்சில் விஜயன் விளக்கம்

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் திருநங்கை வைஷுலிசா பாலியல் புகார் அளித்திருந்தார்.அதில், "கடந்த ஏழு வருடங்களாக நாஞ்சில் விஜயன் என்னுடன் தொடர்பிலிருந்தார். ஆனால் சிறித... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: விஜய் சேதுபதியின் walk-in; முதல் நாள் ஷுட்டிங்; பிக் பாஸ் 9 எப்போது தொடங்குகிறது?

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 9 தொடங்க இருக்கிறது.விஜய் டிவி யின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிகபாஸ்.2017ம் ஆண்டு தொடங்கி கடந்தாண்டு வரை மொத்தம் எ... மேலும் பார்க்க

"அவருடன் மனைவியாக வாழ்ந்திருக்கிறேன்; ஆனால்" - நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார்

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் திருநங்கை ஒருவர் பாலியல் புகார் அளித்திருக்கிறார்.புகார் அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கடந்த ஏழு வருடங்களாக ந... மேலும் பார்க்க

BB: மீண்டும் விஜய் சேதுபதி; `ட்விஸ்ட்' உடைத்த சேனல்! - பிக்பாஸ் சீசன் 9 அப்டேட்

விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். 2017 முதல் ஒளிபரப்பாகி வருகிற இந்த நிகழ்ச்சி இதுவரை எட்டு சீசன்கள் ஒளிபரப்பாகி உள்ளது. ஒன்பதாவது சீசனுக்கான டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. ரோலிங்... மேலும் பார்க்க