"அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல; அதிமுக எம்எல்ஏக்கள்" - இபிஎஸ்-க்கு டி...
தன்மானம்தான் முக்கியம் என்றால் தில்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!
தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி பழனிசாமி தில்லிக்குச் சென்றது ஏன்? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் அவர், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிடோரையும் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் பேசுகையில், “நன்றி மறப்பது நன்றன்று என இபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. நன்றியைப் பற்றி யார் பேசுவது? துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத அவர் பேசுகிறார்.
தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி பழனிசாமி தில்லிக்குச் சென்றது ஏன்?” என்றார்.