செய்திகள் :

Jwala Gutta: 30 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கிய விஷ்ணு விஷால் மனைவி; குவியும் பாராட்டு!

post image

தாயை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்க, அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகளை சில மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. அந்த வங்கிக்கு தாய்மார்கள் தங்களது குழந்தைக்குப் போக எஞ்சியிருக்கும் பாலைத் தானமாகக் கொடுக்கலாம்.

இந்தியாவைச் சேர்ந்த பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் அவரது கணவரும் நடிகருமான விஷ்ணு விஷாலுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து ஜுவாலா கட்டா தனது குழந்தைக்குப் போக எஞ்சிய தாய்ப்பாலை அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்கி இருக்கிறார். அவர் கடந்த 4 மாதத்தில் மொத்தம் 30 லிட்டர் தாய்ப்பாலைத் தேவைப்படும் குழந்தைகளுக்குத் தானமாக வழங்கி இருக்கிறார்.

தாய்ப்பால் கொடுத்தற்கு சான்றிதழ்
தாய்ப்பால் கொடுத்தற்கு சான்றிதழ்

இது குறித்து ஜுவாலா கட்டா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ''தாய்ப்பால் உயிர்களைக் காப்பாற்றுகிறது. நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு, நன்கொடையாளர் கொடுக்கும் தாய்ப்பால் அவர்களின் வாழ்க்கையை மாற்றும்.

நீங்கள் தானம் செய்ய முடிந்தால், அது தேவைப்படும் குடும்பத்திற்கு நீங்கள் ஒரு ஹீரோவாக இருக்கலாம். பால் வங்கிகளுக்கு ஆதரவளிக்கவும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இச்சேவையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி இருக்கின்றனர். ஒருவர் ஜுவாலா கட்டா பல குழந்தைகளின் தாய் என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், "இது சிறந்த பங்களிப்பு. பலர் இதனை இன்னும் செய்யாமல் இருக்கின்றனர். ஜுவாலா கட்டாவின் பங்களிப்பு பல குழந்தைகளுக்கு நேரடியாகப் பயனளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உதவிய ஆமீர் கான்

ஜுவாலா கட்டாவும், விஷ்னு விஷாலும் குழந்தை பெற்றுக்கொள்ள இரண்டு ஆண்டுகள் முயன்றனர். ஆனால் 41 வயதாகும் ஜுவாலாவிற்கு குழந்தை உண்டாகவில்லை. இதையடுத்து செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முயன்றனர்.

அதுவும் 6 முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதியாக 7வது முயற்சியில் அவர்களுக்கு மீரா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்காக அவர்கள் மும்பையில் ஆமீர் கான் வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள பாலிவுட் நடிகர் ஆமீர் கான் உதவியதாக விஷ்ணு விஷால் குறிப்பிட்டு இருந்தார்.

விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டா
ஜுவாலா கட்டா

ஜுவாலா கட்டாவை ஆமீர் கான் மும்பைக்கு அழைத்து 10 மாதம் தங்க வைத்து அவர்களைக் கவனித்துக்கொண்டார். குழந்தை பிறந்த பிறகு பெயர் வைக்க ஆமீர் கான் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். "குழந்தைக்கு மீரா என்று பெயர் வைத்ததும் ஆமீர் கான் தான்" என்று விஷ்ணு விஷால் குறிப்பிட்டு இருந்தார்.

பெயர் சூட்டு விழாவில் ஜுவாலா கட்டா மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். விஷ்ணு விஷாலுக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகன் இருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

உத்தரப்பிரதேசம்: சாப்பாடு எனக் கருதி பணக்கட்டை எடுத்த குரங்கு; பணத்தில் நனைந்த மக்கள்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள மௌதாஹா என்ற நகரத்தில் சாமி சிலைகள் போன்ற ஆன்மீக பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருபவர் பால்கோபால். இவர் தனது கடையில் வசூலான பணத்தை எண்ணி ... மேலும் பார்க்க

``முதுகுவலி காரணமாக விடுமுறை கேட்டவர் 10 நிமிடத்தில் மாரடைப்பால் மரணம்'' - ஊழியர்கள் அதிர்ச்சி

மனிதர்களுக்கு மாரடைப்பு எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. காலையில் நன்றாக இருப்பார்கள். திடீரென மாலையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிடுவார்கள். இப்போதெல்லாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்... மேலும் பார்க்க

Bengaluru: `தண்ணீருக்கு இந்த மாதம் ரூ.15,000' - இணையத்தில் வைரலாகும் வாட்டர் பில் - பின்னணி என்ன?

பெங்களூருவில் வசிக்கும் ஒருவர், தனது வீட்டு உரிமையாளர் ஒவ்வொரு மாதமும் அதிகமான தண்ணீர் கட்டணங்கள் வசூலிப்பதாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, வைரலாகியுள்ளது.சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வசிக்க... மேலும் பார்க்க

Vikatan Digital Awards: ``அஜித் சார்கிட்ட சொல்லவேண்டியது ஒன்னு இருக்கு'' - Digital ICON மதன் கௌரி

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்தியிருக்கிறது விகடன். `Best Solo Creator - Male', `Be... மேலும் பார்க்க

Vikatan Digital Awards: ``100 வருட விகடனைப் போல பிளாக்ஷீப்பை உருவாக்கணும்'' - RJ விக்னேஷ்காந்த்

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்தியிருக்கிறது விகடன்.`Best Solo Creator - Male', `Bes... மேலும் பார்க்க

Vikatan Digital Awards: "26 வருஷம் போராடி நீதி வென்ற கிருஷ்ணம்மாளுக்கு சமர்ப்பிக்கிறேன்!" - புஹாரி

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.`Best Solo Creator - Male', `Best Solo... மேலும் பார்க்க