விஜய் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: அமைச்சா் அன்பில் மகேஷ்
Bengaluru: `தண்ணீருக்கு இந்த மாதம் ரூ.15,000' - இணையத்தில் வைரலாகும் வாட்டர் பில் - பின்னணி என்ன?
பெங்களூருவில் வசிக்கும் ஒருவர், தனது வீட்டு உரிமையாளர் ஒவ்வொரு மாதமும் அதிகமான தண்ணீர் கட்டணங்கள் வசூலிப்பதாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, வைரலாகியுள்ளது.
சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வசிக்கும் போது, அதிகமான செலவுகள் ஏற்படும். குறிப்பாக வாடகைக்கு வீடு எடுத்தோமென்றால், மின் கட்டணம், பராமரிப்பு (மெயின்டனன்ஸ்) கட்டணம் போன்ற பல்வேறு செலவுகள் சேரும்.
அந்த வகையில், ரெட்டி என்ற சமூக வலைப்பக்க பதிவில், பெங்களூருவை சேர்ந்த ஒருவர் 1,65,000 லிட்டர் தண்ணீருக்கு சுமார் 15,800 ரூபாய் பில் வந்ததாக பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, "ஒவ்வொரு மாதமும் அதிக தண்ணீர் கட்டணங்கள் செலுத்துகிறேன். வழக்கமாக எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம் ரூபாய் தண்ணீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நாங்கள் இருவரும் இங்கு தங்கி இருக்கிறோம். அதிகமான நேரத்தை அலுவலகத்தில் தான் செலவிடுகிறோம். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை நாங்கள் மாதம் மாதம் கட்டுகிறோம்.
இதற்காக வீட்டு உரிமையாளரிடம் கேட்டபோது, அவர் ஒவ்வொரு முறையும் ஏதோ காரணங்களை கூறுகிறார்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அந்த பில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சிலர், "தண்ணீர் கட்டணம் எவ்வளவு அதிகமாக இருக்க வாய்ப்பில்லை" என்றும், இணைப்பைச் சரிபார்க்குமாறும் அந்த நபருக்கு சமூக ஊடக பயனர்கள் கூறி வருகின்றனர்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!