சென்னையில் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு!
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது நஸ்ருதின் என்பவரை கடந்த ஜூலை மாதம் மீர்சாகிப்பேட்டை மார்கெட் அருகே தெருநாய் ஒன்று கடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு அவர் ஒரு தனி அறையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.