செய்திகள் :

சிம்பொனி உருவாகக் காரணம் யார்? இளையராஜா நன்றி!

post image

சிம்பொனி உருவாக தனது குழந்தைகள்தான் காரணம் என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இசைத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சனிக்கிழமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில்,

``வாழ்க்கையில் என்னுடைய குழந்தைகளுக்காக நான் நேரம் செலவழிக்கவில்லை. அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டிருந்தால், இந்த சிம்பொனியை எழுதியிருக்க முடியாது. இதுபோல நீங்கள் விரும்பிக் கேட்கும் அத்தனைப் பாடல்களை இசையமைத்திருக்க முடியாது.

ஆகையால், எனது குழந்தைகளுக்குத்தான் நான் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும். என்னைப் பொறுத்துக் கொண்ட கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இருவருக்கும்தான்.

உங்களுடன் செலவழிக்க வேண்டிய நேரம்தான், சிம்பொனியாக இசையாக இங்கு வெளிவந்திருக்கிறது. அதனை நினைத்து நீங்கள் சந்தோஷப்படலாம்.

எங்களுடன் நேரம் செலவழிக்கவில்லை என்று இனிமேல் நீங்கள் புகார்கூற முடியாது. உங்கள் குழந்தைகளும் உங்களிடம் சொல்லும்’’ என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, கார்த்தி உள்ளிட்ட திரைத் துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:தமிழ்நாட்டின் பெருமை! இளையராஜாவுக்கு முதல்வர் பாராட்டு!

மாதம் ரூ. 2000 வழங்கும் அன்புக் கரங்கள் திட்டம்: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப். 14) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக ஓசூர் விம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: 85,711 பேருக்கு வீட்டுமனை பட்டா - முதல்வர் அறிவிப்பு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையி... மேலும் பார்க்க

விராலிமலை: கி.பி 13 ஆம் நூற்றாண்டு வீரபாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு!

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள மைலாப்பட்டி மலை மீது சிதிலமடைந்த நிலையில் உள்ள சிவன் கோயிலில் வீரபாண்டியன் ஆட்சிக்காலத்துத் தானக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.பேராசிரியர் மு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ரூ.2,885 கோடியில் திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி, புதிய திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 14) தொடக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி... மேலும் பார்க்க

பெரம்பலூர் மக்களை சந்திக்க மீண்டும் வருவேன்: விஜய்

பெரம்பலூர் மக்களை சந்திக்க மீண்டும் வருவேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.பெரம்பலூருக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்த தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரம் செய்யாமல் சென்... மேலும் பார்க்க