செய்திகள் :

நேபாள வன்முறையில் பலியானவர்கள் தியாகிகளாக அறிவிப்பு!

post image

நேபாளத்தில் வன்முறையின்போது, பலியானோரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நேபாள ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதளங்கள் மீதான தடைக்கு எதிராக இளைஞா்கள் (Gen Z) நடத்திய போராட்டத்தின்போது நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு கட்டடங்கள் சூறையாடப்பட்டன.

இந்த வன்முறையில் 72 பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், பலியானவர்களை தியாகிகளாக அந்நாட்டின் இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி அறிவித்துள்ளார்.

மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியாக 10 லட்சம் நேபாள ரூபாய் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, பொது மற்றும் தனியார் சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதுவரையில் பலியானோர் குறித்த தகவலின்படி, போராட்டக்காரர்கள் 59 பேர், தப்பியோட முயன்ற கைதிகள் 10 பேர், போலீஸ் அதிகாரிகள் 3 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போராட்டக்காரர்கள் 134 பேர், போலீஸ் அதிகாரிகள் 57 பேர் என மொத்தம் 191 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இலவச சிகிச்சை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:சார்லி கிர்க்கின் கொலையை முன்பே கணித்த பாதுகாவலர்! முன்னெச்சரிக்கை உதாசீனம்!

Nepal Gen-Z protest victims' families to get financial help

சார்லி கிர்க்கின் கொலையை முன்பே கணித்த பாதுகாவலர்! முன்னெச்சரிக்கை உதாசீனம்!

அமெரிக்காவில் திருப்புமுனை அமைப்பின் நிறுவனர் சார்லி கிர்க்கின் கொலை அச்சுறுத்தல் குறித்து முன்னரே எச்சரிக்கை விடுத்ததாக பாதுகாப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொ... மேலும் பார்க்க

சார்லி கிர்க்கை கொன்ற ராபின்சன் தன்பாலின ஈர்ப்பாளரா? யார் அந்த அறை நண்பர்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க்கை (31 வயது), ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கொன்றதாக புலனாய்வுப் பிரிவு அவரைக் கடந்த வெள்ளிக் கிழமை கைது செய்தது.ராபின்சனின் அறை நண்பர... மேலும் பார்க்க

சண்டை அல்லது மரணம்! பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக 1.5 லட்சம் பேர் போராட்டம்!

பிரிட்டனில் புலம்பெயர்வுக்கு எதிராக ஒன்றரை லட்சம் பேர் சேர்ந்து மாபெரும் பேரணி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லண்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அந்நாட்டினர் மாபெரும் போராட்டத்தை சனிக்கிழமையில... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மோதலில் 12 வீரா்கள், 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு கைபா் பக்துன்க்வா மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 12 ராணுவ வீரா்களும், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-எ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 35 பயங்கரவாதிகளும் கொ... மேலும் பார்க்க

இளைஞா்கள் போராட்டத்தில் நீதித்துறை ஆவணங்கள் சேதம்: நேபாள உச்சநீதிமன்றம்!

இளைஞா்கள் போராட்டத்தில் நீதித் துறை சாா்ந்த முக்கிய வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலானவை சேதமடைந்ததாக நேபாள உச்சநீதிமன்றம் தெரிவித்தது. நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதள தடைக்கு எதிராக இளைஞா்கள் நடத்திய ... மேலும் பார்க்க

ஹமாஸுடனான போரில் சட்ட திட்டங்களைப் பின்பற்றவில்லை! இஸ்ரேல் முப்படை தளபதி

ஹமாஸுடனான போரில் தங்களது படையினா் சா்வதேச சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை என்று, 17 மாதங்களாக அந்தப் போரை நடத்திய இஸ்ரேல் முப்படை தளபதி ஹொ்ஸி ஹலேவி ஒப்புக்கொண்டுள்ளாா். மேலும், காஸாவில் இஸ்ரேல் நடத்த... மேலும் பார்க்க