சென்னையில் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு!
வரலாற்றில் இந்து தீவிரவாதிகளே இல்லை: ஜகத்குரு ராமபத்ராச்சாரியார்
ஆன்மிக தலைவர் ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் மீண்டும் மேற்கு உத்தரப் பிரதேசத்தை ’மினி பாகிஸ்தான்’ என்றேக் கூறுவேன் எனப் பேசியது சர்ச்சையக் கிளப்பியுள்ளது.
மாலேகான் குண்டுவெடிப்பில் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால், இவர் காங்கிரஸ் மீது தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பு...
மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கின் மாலேகான் நகரத்தில் உள்ள ஒரு மசூதி அருகே மோட்டாா் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்து 6 போ் உயிரிழந்தனா். 100 போ் காயமடைந்தனா்.
இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்டோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் நீடித்தது. பின்னர், மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே.லஹோட்டி இந்த வழக்கில் குற்றத்தை நிரூபிக்க போதிய சாட்சி இல்லாததால், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரும் நிரபராதி என தீா்ப்பளித்துள்ளாா்.
வரலாற்றில் இந்து தீவிரவாதிகளே இல்லை...
இந்நிலையில், இது குறித்து ஆன்மிக தலைவர் ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் இன்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தை ’மினி பாகிஸ்தான்’ என்கிறேன். சாம்பல் பகுதியில் இருந்து ஏன் ஹிந்துக்கள் வெளியேறுகிறார்கள்? மீரட், முசாஃபர்நகர் பகுதிகளிலும் ஹிந்துகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நான் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?
மாலேகான் வழக்கில் காங்கிரஸைத்தான் வெளிச்சம்போட்டு காட்டுகிறது. அவர்களால் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. இன்று வெற்றிப் பெற்றுவிட்டோம்.
விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரும் சேர்ந்து, காங்கிரஸ் மீது மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர வேண்டும். சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள், ஹிந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்கவே மாட்டார்கள் என்றார்.