விஜய் வெளியே வரமாட்டான் என்றவர்கள் புலம்புகிறார்கள்..! தவெக தலைவரின் புதிய கடிதம...
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 19 வயது இளைஞர் கைது!
உத்தரப் பிரதேசத்தில் 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு 19 வயது இளைஞர் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 8 வயது என்பதால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப் பிரதேசத்தில் அலிகாரின் புறநகரில் 2-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு (8 வயது) அந்தப் பள்ளியின் காவலாளியின் மகன் கோலு (19 வயது) என்பவர் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.
கோலுவைக் கைதுசெய்த அந்தச் சரகத்தின் காவலர் (சர்கிள் இன்ஸ்பெக்டர்) கம்லேஷ் குமார் கூறியதாவது:
இரண்டாம் வகுப்பு படிக்கும்சிறுமியை வெள்ளிகிழமை கோலு என்பவர் அறையில் பூட்டி பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். இருப்பினும் அந்தச் சிறுமி அங்கிருந்து கூச்சலிட்டு, தப்பிச் சென்றிருக்கிறார்.
பின்னர், கோலுவை பிஎன்எஸ், போக்ஸோ விதிகளின்படி கைது செய்தோம் என்றார்.